உணவு சாப்பிட்டதும் வெந்நீர் குடிப்பது செரிமானத்துக்கு உதவுமா?

By Dinesh TGFirst Published Oct 19, 2022, 10:34 PM IST
Highlights

சுடு தண்ணீர் என்று கிடையாது, தண்ணீர் போதுமான வரையில் குடிப்பது செரிமானத்துக்கு உதவும். ஆனால் பலரும் உணவு சாப்பிட்டு முடித்ததும் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். அதனால் உடனடியாக செரிமானம் ஏற்படும் என்றும், அதனால் ஆரோக்கிய நலன் அதிகரிக்கும் என்றும் நம்புகின்றனர்.
 

உணவு சாப்பிட்டதும் செரிமானம் சரியாக நடப்பதில்லை என்கிற பிரச்னை பலரிடையே நிலவுகிறது. இதற்காக அவர்கள் மருத்துவர்கள் அணுவதைக் காட்டிலும் இவர்கள் சொன்னார்கள், அவர்கள் சொன்னார்கள் என்று பல்வேறு வழிமுறைகளை கையாளுகின்றனர். இதனால் அனைவரும் பலனடைவது என்பது குறைவு தான். மாறாக கூடுதல் உடல்நலன் பாதிப்பு தான் ஏற்படுகிறது. அதில் ஒன்று சாப்பிட்டவுடன் ஒரு குவளை சுடு தண்ணீர் குடிக்கும் பலரிடையே இருக்கிறது.

இதன்மூலம் உடலில் செரிமானம் விரைவாக நடைபெறும் என்று எண்ணுகின்றனர். உண்மையில் உணவுச் செரிமானத்தின் போது, செரிமான மண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கிறது. அதாகவது உணவாவது எரிந்துகொண்டே தான் செரிமானமாகிறது. இதை தெரியாமல் சுடுதண்ணீர் குடிப்பது, மேலும் வயிற்றில் வெப்பத்தை அதிகரிக்கிறது.

இதற்கு காரணம் நம்முடைய செரிமான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஹைட்ரோகுளோரிக் அமிலம் தான் காரணம். அப்போது உணவு எரிக்கப்படும் போது புரதம் முதலிய உடலிற்குத் தேவையான அனைத்தும் கரிமங்களும் கனிமங்களும் தாதுஉப்புக்களும்  பிரித்தெடுக்கப்பட்டு ரத்தத்துடன் கலக்கப்படுகிறது. இதையடுத்து ஊட்டச்சத்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சேர்க்கிறது.

Makhana : பாலுணர்வு முதல் இருதய நலன் வரை- தாமரை விதைகளில் கொட்டிக் கிடக்கும் நன்மைகள்..!!

எனினும் இந்த செயல்பாடுக்கு சுடு தண்ணீரின் வெப்பம் சற்றே வினையூக்கியாகப் பயன்படும். ஆனால் வெதுவெதுப்பாக இருந்தால் மட்டுமே பலரும் சுடு தண்ணீரை குடிப்பார்கள். அதை குடிப்பதால் எந்த பலனும் கிடையாது. மாறாக, நீங்கள் சற்று கொதிநிலை கொண்ட குடிநீரை எடுத்துக் கொண்டால் மட்டுமே செரிமானம் உடனடியாக முடிவடையும். ஆனால் அப்படியொரு நிலையில் சுடுநீரை நம்மால் குடிக்க முடியாது.

இதைவிடுத்து உமிழ்நீரை அதிகப்படுத்துவதும் விரைவான செரிமானம் ஏற்பட பெரிதும் உதவும். ஆனால் இதுவும் குறிப்பிட்ட அளவு வரை மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். அதற்கு முதலில் இனிப்பினை உண்ணுவதல் அதிக உமிழ்நீர் சுரக்கும். இதனால் செரிமானத்தை விரைவாக ஏற்படுகிறது. 

click me!