சுடுநீரில் துளசி மற்றும் மஞ்சளை கலந்து குடிப்பதால் இவ்வளவு நல்லது நடக்கும்...

 
Published : Mar 27, 2018, 01:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
சுடுநீரில் துளசி மற்றும் மஞ்சளை கலந்து குடிப்பதால் இவ்வளவு நல்லது நடக்கும்...

சுருக்கம்

Drinking a mixture of tulsi and turmeric in hot water

நோய் தொற்றுக்களின் தாக்கத்தை குறைக்க நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க, கொதிக்கும் சுடுநீரில், துளசி மற்றும் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வர வேண்டும்.

கிடைக்கும் நல்லது 

** துளசி கலந்த இந்த மூலிகை பானத்தை குடிப்பதால், நுரையீரலில் ஏற்படும் அழற்சி மற்றும் சளியின் தேக்கத்தை குறைத்து, அதிகப்படியான சளித் தொல்லையில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

** இயற்கையான இந்த மூலிகை பானத்தில், மஞ்சள் மற்றும் துளசியை கலந்துக் குடிப்பதால், சுவாசப் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுத்து, ஆஸ்துமா நோய் வராமல் பாதுகாக்கிறது.

** மன அழுத்தம் இருப்பவர்கள், தினமும் இந்த மூலிகை பானத்தைக் குடித்து வந்தால், மன அழுத்தம் குறைந்து, மூளையில் சீரான ரத்தோட்டம் நடைபெறும்.

** மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால், நமது உடலின் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.

** அசிடிட்டி மற்றும் அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் இந்த மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பதால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

** துளசி மற்றும் மஞ்சள் கலந்த மூலிகை பானத்தை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை, தலைவலி, புற்றுநோய், கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
 

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க