காய்ச்சலில் படுத்துக் கிடக்கும்போது இந்த உணவுகளை தவறியும் சாப்பிட வேண்டாம்...

Asianet News Tamil  
Published : Mar 26, 2018, 12:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
காய்ச்சலில் படுத்துக் கிடக்கும்போது இந்த உணவுகளை தவறியும் சாப்பிட வேண்டாம்...

சுருக்கம்

Do not eat these foods when you are lying in the fever ...

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்துக் கிடக்கும்போது மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஆவியால் வேக வைத்த உணவுகளைதான். 

துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் உட்பட ஒருசில வகை உணவுகளை தவிர்க்க கூறுவார்கள். 

அதனோடு இந்த உணவுகளையும் தவிர்ப்பது நல்லது...

** பால்

பால் நுரையீரலில் சளி உற்பத்தியை அதிகரித்து மூக்கடைப்பு, மார்பு எரிச்சல் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. எனவே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் போது பால் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது

** சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி செரிமானம் அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். எனவே இது செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் வைரஸ் காய்ச்சலின் போது, சிவப்பு இறைச்சியை சாப்பிடக் கூடாது.

** காரமான உணவுகள்

வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது கட்டாயம் எடுத்துக் கொள்ளக் கூடாத உணவுகளின் பட்டியலில் காரமான உணவுகள் முதலில் உள்ளது எனவே காரமான உணவு வகைகளை கட்டாயம் தவிர்ப்பது நல்லது

** பொரித்த உணவுகள்

காய்ச்சலில் இருக்கும் போது, எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனையை ஏற்படுத்தி, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலை குறைக்கிறது.

** சீஸ்

காய்ச்சலின் போது சீஸ் எனும் பாலாடைக்கட்டியை சாப்பிடக் கூடாது. ஏனெனில் இதை சாப்பிடுவதின் மூலம் நுரையீரலில் அதிக சளி உற்பத்தியாகி, மார்பு எரிச்சலை ஏற்படுத்துகிறது.

** டீ மற்றும் காபி

காய்ச்சலில் இருக்கும் போது கண்டிப்பாக டீ அல்லது காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேறி உடலில் அதிக நீரிழப்பை ஏற்படுத்தும்


 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake