உடல்ல இந்த மாதிரி அறிகுறி தெரியுதா? அதிக கொலஸ்ட்ரால் இருக்கலாம்!!

Published : Jun 05, 2025, 09:43 AM IST
High Cholesterol

சுருக்கம்

உங்களது உடலில் அதிகப்படியான சில அறிகுறிகள் தோன்றும் அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Does High Cholesterol Cause Pain in Legs : அடிக்கடி கால் வலி அல்லது தசைப்பிடிப்பு ஏற்படுவது சாதாரணமான விஷயம் என்று பலரும் கருதுகிறார்கள். உடற்பயிற்சி, நீண்ட நேரம் நிற்பது, அதிகப்படியான வேலை போன்றவை கால் வலி ஏற்படுவதற்கு காரணம் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், சில சமயங்களில் அடிக்கடி கால் வலிப்பதற்கு நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்பதற்கான எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கால் வலி ஏற்படுமா?

நம்முடைய உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாக இருக்கும் போது, இரத்த நாளங்களில் பிளேக் இன்னும் படிவக்களை உருவாக்கி, நாளடைவில் அது ரத்த நாளங்களை சுருக்கி இரத்த ஓட்டத்தை தடை செய்யும். இதற்கு அதெரோஸ்கிளிரோசிஸ் (atherosclerosis) என்று பெயர்.

கால்களுக்கு செல்லும் தமனிகளில் ஏற்படும் இந்த பாதிப்பானது புற தமனி நோய் என்று அழைக்கப்படுகிறது. கால்களுக்கு தேவையான ரத்தம், அதுவும் குறிப்பாக ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் போதுமான அளவில் கிடைக்காததால் நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது, கால் வலி தசை பிடிப்பு, சோர்வு மற்றும் கால் மரத்து போதல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அதிக கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

ஆரோக்கியமான உணவுகள் : நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது தவிர பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பொரித்த உணவுகள், வெண்ணெய், பாமாயில் ஆகியவற்றையும் தொட்டுக் கூட பார்க்க கூடாது. அதற்கு பதிலாக புதிய பழங்கள், பச்சை இலை காய்கறிகள், முழு தானியங்கள், நட்ஸ்கள், மீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி : தினமும் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. உடற்பயிற்சி உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். மேலும் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.

புகை பிடிப்பதை தவிர்க்கவும் : புகை பிடிப்பது ரத்த நாளங்களை மோசமாக பாதிக்கும் எனவே உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே அதை நிறுத்தி விடுங்கள்.

எடையை கட்டுக்குள் வை! உடல் எடை அதிகமாக இருந்தால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். எனவே உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு முறை மூலம் உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும்.

மருத்துவரின் ஆலோசனை : உங்களது வாழ்க்கை முறையில் மாற்றங்கள் செய்த போதும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு : உங்களுக்கு அடிக்கடி கால் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படுத்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், அதற்கான காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Lip Scrub : உதடுகளின் கருமை நிறம் மாறி 'அழகாக' வாரம் 2 முறை 'இதை' தடவுங்க
Winter Skincare : முகத்திற்கு லெமன் ஜுஸ் தடவலாமா? குளிர்கால சரும பராமரிப்பு 'இது' முக்கியம்