
ஆண், பெண் இருவருக்கும் முடி உதிர்தல், இளநரை, செம்பட்டை நிறமாக முடி மாறுதல், கருமை மங்குதல் என்பன போன்ற பிரச்சனைகள் உள்ளன.
இவற்றிற்கு என்ன பண்ணலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..
1.. வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேக வைத்து ஒருநாள் கழித்து வேக வைத்த நீரினால் தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்றுவிடும்.
2.. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து, காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி, தலையில் தேய்த்துக் குளித்துவர முடி உதிர்வது நிற்கும்.
3.. வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்துக்குப் பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
4.. முடி உதிர்ந்த பகுதிகளில் முடி வளர கீழா நெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் முடி வளரும்.
5.. முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
6.. முடி வளர கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
7.. இளநரை கருப்பாக, நெல்லிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரலாம்.
8.. செம்பட்டை முடி நிறம் மாற, மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்துத் தலைக்குத் தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.
9.. காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி, தேங்காய் எண்ணையுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டிதேய்த்து வந்தால் முடி கருமையாகும்.
10.. முடிகொட்டிய இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு நன்றாக அரைத்துத் தடவிவர வேண்டும்.