மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் போடுவது பலரின் பழக்கம். இந்த விசேஷ நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள். இப்படி மதியம் தூங்குவது நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது உண்மையில் நல்லதா? அல்லது ஏதேனும் கெட்டது உள்ளதா? என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளை தெரிந்துகொள்வோம்.
மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது உண்மையில் நல்லதா? அல்லது ஏதேனும் கெட்டது உள்ளதா? என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
மதிய உணவுக்குப் பிறகு குட்டித் தூக்கம் போடுவது பலரின் பழக்கம். இந்த விசேஷ நேரத்தில் வீட்டில் இருப்பவர்கள். இப்படி மதியம் தூங்குவது நல்லது என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். ஆனால் மதிய உணவுக்குப் பிறகு தூங்குவது உண்மையில் நல்லதா? அல்லது ஏதேனும் கெட்டது உள்ளதா? என்கிற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகளை தெரிந்துகொள்வோம்.
undefined
சாப்பிட்ட பிறகு ஒரு தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்பது மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.
யாரெல்லாம் மதியம் உறங்கலாம்?
1. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக பிபி (இரத்த அழுத்தம்) உள்ளவர்களுக்கு, இருதய பிரச்னை கொண்டவர்கள் மதிய நேரங்களில் தூங்குவது நல்லது.
2. 2. ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது நன்மை பயக்கும். நீரிழிவு, தைராய்டு, பிசிஓடி மற்றும் அதிகப்படியான உணவுக் கோளாறு உள்ளவர்களும் மதிய உணவுக்கு பிறகு சிறுது நேரம் தூங்கலாம்.
3. மதியம் தூக்கம் செரிமானத்திற்கும் உதவுகிறது. குறிப்பாக மலச்சிக்கல், முகப்பரு மற்றும் பொடுகு போன்ற பிரச்னை கொண்டவர்கள் மதியம் தூங்குவது நன்மையை தரும்.
4. மதியம் தூக்கம் இரவு தூக்கத்தில் தலையிடக்கூடாது. ஒருவேளை உங்களுக்கு இரவுத் தூக்கம் பாதிக்கப்பட்டால், மதியம் தூங்க வேண்டாம். ஆனால் தூக்கம் வந்தால், எழுந்ததும் நன்றாக வேலை செய்யுங்கள். இதனால் இரவு தூக்கம் வந்துவிடும்.
5. பிற்பகல் தூக்கம் எந்தவொரு உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் பெற உதவுகிறது. உதாரணமாக, உடற்பயிற்சியுடன் தொடர்புடைய உடல் வலிகள், உடல்வலி மற்றும் தலைவலி போன்ற சிறிய சோர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கு மதிய நேரத்தில் தூங்குவது நல்லது.
6. மதியம் சாப்பிட்டவுடன் தூங்குவது உடலில் உள்ள கொழுப்பை வெளியேற்றவும் உதவுகிறது.
de-stress | மன அழுத்தப் பிரச்னையில் இருந்து விடுபட உதவும் 5 உணவுகள்..!!
யாரெல்லாம் தூங்கக் கூடாது?
ஆனால் மதியம் தூங்குவதற்கும் நேரம் கொடுக்க வேண்டும். ஒரு மணி முதல் மூன்று மணி வரை குறைந்தது முப்பது நிமிடங்களாவது தூங்கிவிடுங்கள். இது ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கலாம்.
படுக்கையில் தான் படுக்க வேண்டும் என்பது கிடையாது. மேஜையில் தலை வைத்து அலுப்பில் தூங்கலாம், சோஃபாவில் படுத்து உறங்கலாம், ஜன்னல் ஓரமாக தலைவைத்து படுக்கலாம். யாராவது ஏன் இப்படி படுத்து உறங்குகிறீர்கள் என்று உங்களை கேட்டால், உடலில் உற்பத்தி திறன் சிறப்பாக செயல்பட படுத்து தூங்குவதாக சொல்லுங்கள்.
பிற்பகல் தூக்கம் சாத்தியம், ஆனால் நான்கு முதல் ஏழு வரை அல்ல. மதிய உணவுக்குப் பிறகு டீ, காபி, சிகரெட், சாக்லேட் போன்றவற்றை உட்கொள்வதும் நல்லதல்ல. இவை அனைத்தும் தூக்கத்தைக் கெடுக்கும். அதேபோல வரும் தூக்கத்தையும் கெடுத்துவிடும். உதாரணமாக போன் உபயோகம் - டி.வி பார்ப்பது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். அதனால் முடிந்தவரை மதியம் கண்டதை எல்லாம் சாப்பிட்டுவிட்டு தூங்கச் செல்லாதீர்கள். அதேபோன்று வரும் தூக்கத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.