உங்களுக்குத் தெரியுமா? குரல் கரகரப்பாக இருப்பதுகூட இந்த புற்றுநோயின் அறிகுறிதான்...

 
Published : Jun 15, 2018, 02:45 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
உங்களுக்குத் தெரியுமா? குரல் கரகரப்பாக இருப்பதுகூட இந்த புற்றுநோயின் அறிகுறிதான்...

சுருக்கம்

Do you know The voice of the voice is a symptom of this cancer ...

நுரையீரல் புற்றுநோயைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம். ஏனெனில், நாம் மாசு நிறைந்த சூழலில் வசிக்கிறோம். வேலை செய்யும் இடங்களில் டீசல் வெளியேற்றிய புகையை சுவாசிப்பது, ஆஸ்பெஸ்ட்டாஸ் (Asbestos) கூரையின் கீழ் வசிப்பது போன்ற சூழல் இருந்தால் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். 

இதைத் தவிர புகைப்பிடிப்பவர்களுக்கும் அப்புகையை அருகே இருந்து சுவாசிப்பவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு 90 சதவிகித வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக, ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கிறார் என வைத்துக்கொள்வோம். 

இப்படித் தொடர்ந்து 10 ஆண்டுகள் புகைபிடித்தால், அவரது உடல்நிலை, 20 ஆண்டுகளாக புகைபிடிப்பவரின் உடல் நிலைக்குச் சமமாகிவிடும். இதுபோன்ற நிலையில், அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம்.

நுரையீரல் புற்றுநோயின் அறிகுறி தெரிந்தவுடன், ஆரம்பத்திலேயே அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்!

புற்றுநோயின் அறிகுறிகள்…

* தொடர்ச்சியாக தொண்டைவலியோ, உணவை விழுங்கும்போது தீவிரவலியோ ஏற்பட்டால், அது டிஸ்பேகியாவாக (Dysphagia) இருக்கலாம். டிஸ்பேகியா நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது. இது, மிகவும் அபாயமான அறிகுறியும்கூட. புற்றுநோய் தொண்டையிலிருந்து உணவுக்குழாய் வரை பரவும்போது, இதுபோன்ற வலிகள் ஏற்படும்.

* தொடர்ச்சியாக உடல்வலி இருப்பின் அதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கான அறிகுறியே. புற்றுநோய் செல்கள் எலும்புகளில் பரவி, அவற்றை வலுவிழக்கச் செய்வதால் வலி ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கடுமையான வலி ஏற்படும். தொடர்ந்து முதுகு, தோள்பட்டை, கைகள் மற்றும் கழுத்துகளில் அதிக வலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

* சிலருக்கு மார்பகத்தில் நீண்ட நேரத்துக்கு மிதமான வலி இருக்கும். சிலருக்கு நுரையீரலைச் சுற்றி கூர்மையான வலி அவ்வப்போது ஏற்படும். இதனுடன் சேர்ந்து முதுகு, தோள்பட்டையிலும் வலி உண்டாகும்.

* திடீரென அசாதாரணமான, அதிகளவு எடை இழப்பு ஏற்படும். பொதுவாகவே உடல் எடை அதிக அளவில் குறைவதென்பது, `உடல் ஆரோக்கியமாக இல்லை’ என்பதைக் குறிக்கும். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு இதுவே முக்கிய அறிகுறி. ஏனெனில், புற்றுநோய் உண்டாக்கும் செல்கள், உங்கள் உடம்பில் உள்ள ஆற்றலைக் கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் தேவையின்றி சத்துக்களை வெளியே தள்ளுகின்றன.

* நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போதும், வெளியேற்றும்போதும் விசில் அடிப்பதுபோன்ற சத்தத்தை உணர்கிறீர்களா? இதற்கு சுவாசப் பாதையிலுள்ள வீக்கம் அல்லது அடைப்பு காரணமாக வரும் மூச்சுத்திணறலே காரணம். பொதுவாக மாசு, அலர்ஜி, தூசியின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். ஆனால் இதுவும் நுரையீரல் புற்றுநோய்க்கு ஓர் அறிகுறியே.

* உங்களின் குரல் கரகரப்பாக மாறி இருக்கிறதா? அப்படி என்றால் உப்பு போட்ட வெதுவெதுப்பான நீரால் வாயைக் கொப்பளியுங்கள். அதைச் செய்த பிறகும் உங்கள் குரல் அப்படியே இருந்தால், உடனே மருத்துவரை நாடுங்கள். ஒருவேளை, குரல் வளையில் உள்ள நரம்புகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதற்குத் தகுந்த சிகிச்சை எடுக்கவில்லை என்றால், உங்கள் குரல் வளையை இது குலைத்துவிடும்; குரல் வளத்தையும் பாதித்துவிடும்.

* சுகாதாரமான சுற்றுச்சூழலில் வசிப்பது, சமச்சீரான உணவுகளை உட்கொள்வது, சரியான வாழ்வியல் முறையைப் பின்பற்றுவது ஆகியவை நுரையீரல் புற்றுநோயில் இருந்து நம்மைத் விலக்கி வைத்திருக்கும். இதன் அறிகுறி தென்பட்டால், கவலைப்படாமல் உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், முழுமையாக இதன் பிடியில் இருந்து விடுபடலாம்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க