தக்காளி சாற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள்! நடக்கும் அதியசயத்தை நீங்களே பார்ப்பீர்கள்...

First Published Jun 15, 2018, 2:37 PM IST
Highlights
Take a glass of tomato juice everyday! You will see the future ...


தக்காளி சாற்றை தினமும் ஒரு டம்ளர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்... 

தக்காளி சாற்றில் விட்டமின் A, C , சல்பர், குளோரின் மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. 

தக்காளி பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள், ரத்தம் மற்றும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்புகளைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.

தக்காளியில் உள்ள சல்பர் மற்றும் குளோரின் கல்லீரல், சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஊக்குவித்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

தக்காளி பழச்சாறு நம் உடலிற்கு போதுமான ஈரப்பதத்தை அளித்து, செரிமான குழாயில் உணவுகள் சிக்குவதை தடுத்து, செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

தக்காளியில் உள்ள விட்டமின் B6 ஊட்டச்சத்து, இதய நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து, இதயம் தொடர்பான நோயினை ஏற்படுத்தும் ஹோமோசைஸ்டீன் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

தோலின் மேற்புறத்தில் ஏற்படும் பருக்கள், வீக்கங்கள் போன்ற தோல் தொடர்பான நோய்களை தடுப்பதுடன், சருமத்தின் துளைகள் வழியாக தூசுக்கள் நுழைவதையும் தடுக்கிறது.

நுரையீரல், மார்பகம், குடல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் தக்காளி சாறு எடுத்து குடிப்பது நல்லது.

click me!