
நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான பானம் கஞ்சி ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.
விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக் குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.
கஞ்சி!
காய்ச்சல் வந்தால் வெறும் கஞ்சி கொடுத்தால் போதும்’ உடல் தானாக சுறுசுறுப்பாகிவிடும். தாய் பால் ஊட்ட முடியாத பெண்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சத்து பெறும்.
கம்மங்கஞ்சி!
இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான்.
உளுத்தங்கஞ்சி!
பருவமடைந்த பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
நொய்க்கஞ்சி!
வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க்கஞ்சி கொடுப்பது நமது வழக்கமாக இருந்து வந்தது. கஞ்சி வெறும் உணவல்ல மருந்தும் கூட.
நார்ச்சத்து!
கஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்க பிரச்சனைகளை தீர்க்கும். செரிமான மண்டலத்தை வலுவாக்கும். மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியை காலைக்கடன் கழிக்க உதவும்.
வயிற்றுப்போக்கு!
வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து கஞ்சித்தண்ணி தான். இதை மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.
உட்கொள்ளும் முறை!
காலை மாலை என இரண்டு வேலை இந்த அரிசி பால் கஞ்சி குடிக்க வேண்டும். மேலும், இதை காற்றுப்புகா வண்ணம் கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் குடித்த வர கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியமாகும்.