உங்களுக்குத் தெரியுமா? கார் அரிசி சாப்பிட்டால் சருமம் மென்மையடையும்…

Asianet News Tamil  
Published : Jun 09, 2017, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
உங்களுக்குத் தெரியுமா? கார் அரிசி சாப்பிட்டால் சருமம் மென்மையடையும்…

சுருக்கம்

Do you know rice will soften your skin

1.. கார் அரிசி:

இது நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் நல்ல உறுதி நிலையடையும். தசைகள் நல்ல முறையில் வளச்சியடையும். உடல் தோற்றத்தில் கவர்ச்சி ஏற்ப்படும். சருமம் மென்மையடையும்.

2.. குண்டு சம்பா அரிசி:

நா வறட்சியை தீர்க்கும். ஆனால் பசியை குறைக்கும்.

3. குன்று மணி சம்பா அரிசி-

வாதக் குறைபாடுகள் நீக்கும் சத்து உண்டு. விந்தை பெருக்கும். உடல் வன்மையைப் பெருக்கும்.

4. சீரகச் சம்பா:

சிறுவாத நோய்களைக் குணமாக்கும். பசியை அதிகரிக்கும்.

5. கோடைச் சம்பா அரிசி-

வாதப் பித்த சிலேட்டும் நோய்களைக் குணப்படுத்தும். உடலுக்கு நல்ல குளிச்சி இயல்பைத் தரும்.

6. ஈர்க்கு சம்பா-

சுவையானது. கண்களின் நலனுக்கு இது மிகவும் சிறந்தது. பித்த எரிச்சலை விலக்கும்.

7. புழுங்கலரிசி-

அரிசியின் முழுச்சத்தும் வீணாகாமல் தரும். எல்லா வயதினருக்கும் எல்லா தரத்தினருக்கும் உகந்தது. நோய்வாய்ப்பட்டவர்கள் சாப்பிட உகந்தது.

8. கோதுமை-

உடலுக்கு வளமையும் அளிக்கும். விந்தினை அதிகப்படுத்தும்.

9. சோளம்-

பசியை மந்தப்படுத்தும். உடல் வன்மையைப் பெருக்கும்.

10. கம்பு-

வீரிய விருத்தி அளிக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும். ஆனால் உடலில் நமைச்சல் ஏற்ப்படுத்தும்.

11. கேழ்வரகு-

உடல் உழைப்பாளிக்கு ஏற்ற தானியம். உடலுக்கு வேண்டிய புரதச்சத்துகளை பெருமளவில் தருகிறது.

12. சவ்வரிசி-

சத்து நிறைந்த இவ்வணவு நோய்வாய்ப்படிருப்பவர்களின் உடல் பலவீனத்தை அகற்றும்.

13. சாமை அரிசி-

காய்ச்சல் காரணமாக ஏற்படும் நா வற்ச்சியைப் போக்கும். உடலை வலிமை உடையதாக ஆக்கும் ஆற்றல் உள்ளது.

14. தினை அரிசி-

சளித்தொல்லையை அகற்றும். காய்ச்சல் வேகத்தைத் தணிக்கும். இரத்த சோகையை அகற்றும்.

15. திப்பிலி அரிசி-

விந்தினை வளக்கும். மேக நோயைக் குணமாக்கும். வாத கோளாறுகளை அகற்றும்.

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!