உங்களுக்குத் தெரியுமா? பூண்டு சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்கும்...

First Published Mar 2, 2018, 1:24 PM IST
Highlights
Do you know It is easy to remove stains in garlic skin ...


 

முகத்தில் இருக்கும் தழும்புகளை போக்க

நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டுதான் நம் பாட்டிமார்கள் தங்கள் அழகைப் பராமரித்தார்கள். 

இப்படி இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியதால், அவர்களது சருமம் பல வருடங்களுக்கு இளமையுடனும், எவ்வித பிரச்சனை இல்லாமலும் இருக்கும்.

1.. பெர்ரி ஜூஸ்

கிரான்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழத்தைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

2.. எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு மற்றும் தயிரை சரிசம அளவில் எடுத்து, ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதாலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அகலும்.

3.. பூண்டு

பூண்டில் உள்ள உட்பொருட்கள், சருமத்தில் உள்ள நீங்கா கறைகளை எளிதில் போக்க வல்லது. அதற்கு ஒரு பூண்டு பல்லை இரண்டாக வெட்டி, அதனை முகத்தில் தேய்க்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

4.. ஜிங்க் மற்றும் செலினியம்

ஜிங்க் மற்றும் செலினியம் குறைபாடு இருந்தாலும், சருமத்தில் பிரச்சனைகள் வரக்கூடும். எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களான உலர் பழங்கள், பால், சோளம், பருப்பு வகைகள், மீன், ஈரல், எள்ளு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

click me!