எளிதான இந்த வழிமுறைகளை பின்பற்றி பொடுகை விரட்டலாம்...

Asianet News Tamil  
Published : Mar 02, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
எளிதான இந்த வழிமுறைகளை பின்பற்றி பொடுகை விரட்டலாம்...

சுருக்கம்

The easiest way to follow these steps is to drive away ...

பொடுகு குழந்தைகள் முதற்கொண்டு வயதானவர்கள் வரை உண்டாகும் தொற்று. இது பூஞ்சைகளாலும் பாக்டீரியாக்களாலும் உண்டாகும். பொடுகு அதிகப்படியான முடி உதிர்தலையும், வறட்சியையும் உண்டாக்கும்.

பொடுகிற்கு ஷாம்பு போட்டால் இன்னும் அதிகமாகும். ஆகவே முதல் வேலையாக ஷாம்புவை தவிருங்கள். 

எளிதான இந்த வழிமுறைகளை பின்பற்றி பொடுகை விரட்டுங்கள். இது கூந்தல் வளர்ச்சியை பாதிக்காது.

** பால் மற்றும் மிளகுப் பொடி :

பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் பொடுகு மாயமாகிவிடும்.

** பசலைக் கீரை :

பசலைக் கீரை பூஞ்சை தொற்றை அழிக்கக் கூடியது. பசலைக் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசவும்.

** அருகம்புல் :

அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி பின் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.

** வினிகர் :

தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டினால் பொடுகு மறையும்.

** மருதாணி இலை :

மருதாணி இலையை அரைத்து அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்க்கவும். இந்த கலவையை கூந்தலின் அடிப்பாகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசவும். இது நல்ல பலன் தரக் கூடியது. சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் 15 நிமிடம் இருந்தால் போதுமானது.

** யூகலிப்டஸ் தைலம் :

யூகலிப்டஸ் எண்ணெயை சூடாக்கி, தலையில் தடவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு துண்டை சூடான நீரில் நனைத்து பிழிந்து தலையில் கட்டவும். அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு காணாமல் போகும்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake