ஐந்தே நாட்களில் இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். எப்படி?

 
Published : Mar 02, 2018, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
ஐந்தே நாட்களில் இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். எப்படி?

சுருக்கம்

Within five days the amount of sugar in the blood can be reduced. How

நீரிழிவு என்பது ஒரு நோயல்ல. அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்படும் ஒரு ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நிலையாகும். தற்போது ஏராளமான மக்கள் இப்பிரச்சனையால் மிகுந்த அவஸ்தைப்பட்டு வருகின்றனர். 

ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், அவர்கள் வாழ்நாள் முழுவதும் அதற்கான மருந்து மாத்திரைகளை எடுத்து வர வேண்டிய கட்டாயம் இருக்கும்.

உலகில் பெரும்பாலான இளம் வயதினர் டைப்-2 நீரிழிவால் அவஸ்தைப்படுகின்றனர். சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, உடலில் இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு, கர்ப்ப கால நீரிழிவால் கஷ்டப்படுகின்றனர். 

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானம் ஐந்தே நாட்களில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். 

தேவையான பொருட்கள்:

பச்சை ஆப்பிள் – 1

கேரட் – 2

பசலைக்கீரை – 1

கையளவு செலரி – 2 கொத்து

பச்சை ஆப்பிள்

பச்சை ஆப்பிளில் மாலிக் அமிலம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

கேரட்

கேரட் பார்வை கோளாறுகள் மற்றும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் கால்சியம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது.

செலரி

செலரியில் மக்னீசியம், பொட்டாசியம் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் சிறந்தது.

தயாரிக்கும் முறை:

முதலில் ஆப்பிள், கேரட் போன்றவற்றின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் இதர பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

குடிக்கும் முறை:

இந்த பானத்தை சர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவு சீராகி, இரத்த அழுத்தமும் குறையும்.

PREV
click me!

Recommended Stories

Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி
Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!