உங்களுக்குத் தெரியுமா? சோர்வை நீக்கி உடல் புத்துணர்வு பெற இந்தப் பழத்தை சாப்பிட்டாலே போதும்...

 
Published : May 26, 2018, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சோர்வை நீக்கி உடல் புத்துணர்வு பெற இந்தப் பழத்தை சாப்பிட்டாலே போதும்...

சுருக்கம்

Do you know enough to eat this fruit to get rid of tiredness and get the body refreshing ...

செவ்வாழை...

செவ்வாழையில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இதில் பீட்டா-கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி வளமாக உள்ளது. பீட்டா-கரோட்டீன் தமனிகள் தடிமனாவதைத் தடுக்கும் மற்றும் உடலை இதய நோய், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

பீட்டா-கரோட்டீன் உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. அதற்காக தினமும் அந்த சத்து நிறைந்த உணவுப் பொருளை தவறாமல் உட்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் பீட்டா-கரோட்டீன் உடலினுள் செல்லும் போது வைட்டமின் ஏ-வாக மாற்றப்பட்டு, கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

** செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும். மேலும் இது உடலில் கால்சியம் உறிஞ்சுவதை அதிகரித்து, எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். எனவே உங்களுக்கு சிறுநீரக பிரச்சனைகள் ஏதும் வராமலிருக்க தினமும் ஒரு செவ்வாழையை உட்கொண்டு வாருங்கள்.

** பொதுவாக எடையைக் குறைக்க நினைப்போர் கலோரிகள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை எடுக்கக்கூடாது. செவ்வாழையில் மற்ற வாழைப்பழங்களை விட கலோரிகள் மிகவும் குறைவு. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் ஒரு செவ்வாழையை காலையில் உட்கொண்டு வந்தால், பசி நீண்ட நேரம் எடுக்காமல் இருக்கும்.

** உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உடலில் இரத்தணுக்களின் அளவை சீராக பராமரிக்க வேண்டியது அவசியம். அதற்கு செவ்வாழை மிகவும் உதவியாக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்தணுக்களின் அளவை சீராகப் பராமரிக்கும்.

** செவ்வாழை உடலுக்கு ஆற்றலை வழங்கி உடலின் சுறுசுறுப்பை அதிகரிக்கும். எப்படியெனில் செவ்வாழையில் உள்ள இயற்கை சர்க்கரை ஆற்றலாக மாற்றப்பட்டு, சோர்வைத் தடுத்து, உடலை புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்கிறது. எனவே நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்க விரும்பினால் தினம் ஒரு செவ்வாழையை சாப்பிடுங்கள்.
 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!