துளசி சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்... மன இறுக்கம்கூட நீங்கும்னா பாருங்களேன்...

 
Published : May 26, 2018, 01:40 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
துளசி சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்... மன இறுக்கம்கூட நீங்கும்னா பாருங்களேன்...

சுருக்கம்

Take only one teaspoon of honey in basil juice and get such benefits ...

துளசி இலைச் சாறில் தேன் கலந்து குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்... 

** சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

** துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

** 1 டம்ளர் பாலில் துளசி சேர்த்து குடித்து வந்தால் அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பொருள், உடலின் வெப்பதை குறைத்து, காய்ச்சலை விரைவாக குறைக்கிறது.

** துளசியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள், இதயத்தின் நலனை ஊக்குவித்து, இதயத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் நன்றாக சென்று வருவதற்கு உதவுகிறது.

** சூடான பாலில் துளசியை சேர்த்து குடித்து வந்தால், அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தி, பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை குறைத்து, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

** துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

** துளசி, பால் கலந்த பானத்தில் உள்ள சிறந்த டையூரிடிக், யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.

** சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

** துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.

** நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!