உங்களுக்குத் தெரியுமா? இடுப்பு வலியை விரட்ட பூண்டு கலந்த பாலை குடிக்கலாம்...

 
Published : Jun 06, 2018, 03:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
உங்களுக்குத் தெரியுமா? இடுப்பு வலியை விரட்ட பூண்டு கலந்த பாலை குடிக்கலாம்...

சுருக்கம்

Do you know Drink garlic mixed with hip pain

பூண்டு மிகுந்த மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் சிறப்பான உணவுப் பொருள். ஆனால் உணவில் சேர்க்கும் பூண்டை நம்மில் பெரும்பாலான மக்கள் தூக்கி எறிந்துவிடுவோம். இதற்கு காரணம் அதன் சுவை தான்.

பூண்டை பாலுடன் சேர்த்துக் குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். 

அப்படியென்ன நன்மைகள்...

** சளி மற்றும் காய்ச்சல் 

உங்களுக்கு திடீரென்று தீவிரமான சளி மற்றும் காய்ச்சல் வந்தால், அப்போது பூண்டு சேர்த்த பாலைக் குடியுங்கள். இதனால் பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலைக் கொடுக்கும்.

** முகப்பரு 

நீங்கள் முகப்பருவால் அதிகம் கஷ்டப்படுபவராயின், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

** தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் 

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

** நுரையீரல் அழற்சி 

பூண்டு பால் நுரையீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சிறந்த ஓர் நிவாரணி. மேலும் இந்த பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம். இந்த பால் மிகவும் சுவையானதாகவும் இருக்கும்.

** நல்ல செரிமானம் 

செரிமானம் சீராக நடைபெற வேண்டுமானால் பூண்டு பால் குடிப்பது நல்லது. ஏனெனில் பூண்டு, உணவைச் செரிக்கும் செரிமான திரவத்தை தூண்டி, உணவுகள் எளிதில் செரிமானமாக உதவும்.

** வயிற்றுப் புழுக்கள் 

பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதற்கு இந்த பாலை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

** இடுப்பு மற்றும் பின்புற கால் வலி பூண்டு பாலில் உள்ள வலி நிவாரணி தன்மை, இடுப்பு மற்றும் பின்புற கால் வலியினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு நல்லது. எனவே உங்களுக்கு இப்பிரச்சனை இருந்தால் பூண்டு பாலை குடித்து நன்மைப் பெறுங்கள்.
 

PREV
click me!

Recommended Stories

Pulicha Keerai : புளிச்ச கீரைக்கு இவ்வளவு 'சக்தி' இருக்கு!! ஆண்களுக்கு 'கண்டிப்பா' தேவை
உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?