வாரத்தில் ஒரு முறை இந்த காய் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்... அவ்வளவு சத்துகளை கொண்டது...

 
Published : Jun 06, 2018, 02:59 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
வாரத்தில் ஒரு முறை இந்த காய் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும்... அவ்வளவு சத்துகளை கொண்டது...

சுருக்கம்

Once a week the disease is healed by the disease it so nutrient ...

புடலங்காயின் மருத்துவ குணங்கள்...

புடலங்காயை வாரம் ஒரு முறை உண்டு வந்தால் இதன் அற்புதமான சத்துகளை பெறலாம். 

புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயே பயன்படுத்த வேண்டும்.

விந்துவை கெட்டிபடுத்தும். ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது புடலங்காய் காமத்தன்மை பெருகும் வல்லமையும் புடலங்காய்க்கு உண்டு.

அஜீரண கோளாறு அகன்று, எளிதில் ஜீரணமாகி நல்ல பசியை உண்டாக்கும்.

குடல் புண்ணை ஆற்றும். வயிற்று புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேற்கொண்ட நோயின் பாதிப்பு பெருமளவு குறையும்.

இதில் நார் சத்து அதிகம் இருப்பதால் மலசிக்கலை போக்கும் தன்மை உடையாதாக இருக்கிறது.

மூல நோய் உள்ளவர்களுக்கு புடலங்காய் நல்ல மருந்தாக இருக்கிறது.

நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, ஞாபக சக்தியை அதிகரிகிறது.

பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைபடுதலை குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கண் பார்வையே அதிகரிக்க செய்கிறது.

இதில் அதிகம் நீர்சத்து இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

வாத, பித்த, கபங்களால் ஏற்படும் நோய்களை போக்கும்.


 

PREV
click me!

Recommended Stories

கர்ப்ப காலத்தில் இந்த 7 உணவுகள் கட்டாயம் சாப்பிடனும்?
கல்லீரலை நாசமாக்கும் 7 மோசமான உணவுகள்