உங்களுக்குத் தெரியுமா? காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும்...

Asianet News Tamil  
Published : May 30, 2018, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
உங்களுக்குத் தெரியுமா? காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் நிறைய மாற்றங்கள் நிகழும்...

சுருக்கம்

Do you know As soon as we get up early in the morning the body will have a lot of changes in our body.

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ...

** தூங்கி எழுந்தவுடன் தண்ணீரை குடித்தால், உடலில் வளர்சிதை மாற்றம் ஒன்றரை மணி நேரத்தில் 24% அதிகமாகும்.

** தண்ணீர் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை போக்கி, உடலில் தேவையின்றி இருக்கும் கிருமிகள் அனைத்தையும் வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்குகிறது.

** தூங்கி எழுந்தவுடன் நீர் குடிப்பதால், பசி குறையும். இதனால் உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை குறைக்கிறது.

** தினமும் தண்ணீரை அதிகமாக குடித்து வருவதன் மூலம் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். இதனால் நம் உடலின் நிணநீர் மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

** சீரான அளவில் தினமும் நீர் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வந்தால், சருமத்தில் அதிக சுருக்கம், வறட்சி ஏற்படுவதை தடுத்து, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

** காலை எழுந்ததும் நீர் குடித்து வந்தால், மலம் கழிப்பதில் பிரச்சனைகள் வராது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானில் மக்களை கொல்லும் 600,000 மருத்துவர்கள்... கட்டுக்கடங்காத மரண வியாபாரிகள்..!
இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!