தலையில் உண்டாகும் அரிப்பை குணப்படுத்த நான்கு அற்புத மருத்துவ குறிப்புகள் இருக்கு...

First Published May 30, 2018, 1:38 PM IST
Highlights
There are four amazing medical tips to cure headaches.


தலையின் மேல் உள்ள தோல் பகுதியில் ஏற்படும் அரிப்பு காரணமாக செதில் செதிலாக மாவுபோன்று கொட்டுகிற நிலை, ஈறு மற்றும் பேன்கள் உருவாவது, பொடுகு தொல்லை, இதை தொடர்ந்து உடலில் அரிப்பு, சொரி போன்றவை ஏற்படும். 

பொடுகினால் அரிப்பு உண்டாகும். சொரியாசிஸ் உடல் முழுவதும் வரக்கூடியது. குறிப்பாக, கைகால் மூட்டுகளில் வந்து துன்புறுத்தும். இப்பிரச்னைகளை தடுக்க ஆரம்பத்திலேயே மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.

1.. ஆவாரம் பூவை பயன்படுத்தி தலை அரிப்பை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 

தேவையான பொருட்கள்: 

ஆவாரம் பூ, இலுப்பை எண்ணெய். செய்முறை: ஆவாரம் பூ பசையுடன் இலுப்பை எண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி இளஞ்சூடாக எடுத்து வாரம் இருமுறை தேய்த்து குளிப்பதால் தலையில் அரிப்பு, பொடுகு, சொரியாசிஸ் போன்றவை குணமாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட ஆவாரை சாலையோரங்களில் காணக்கூடியது. ஆண்டு முழுவதும் பூவோடு இருக்கும். தங்க நிறமுடைய பூக்களை கொண்டுள்ளது. 

2.. அருகம்புல்லை பயன்படுத்தி தோல், தலையில் உண்டாகும் அரிப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். 

செய்முறை:

அருகம்புல் சாறுடன் சிறிது மஞ்சள் பொடி, சித்தரத்தை பொடி சேர்த்து நன்றாக கலந்து தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்தால் தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும்.

3.. நல்லெண்ணெய்யை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுக்கவும். இதனுடன் பூண்டு பற்களை லேசாக தட்டிபோடவும். வெண்மிளகு பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் தலையில் உண்டாகும் அரிப்பு, பொடுகு தொல்லை நீங்கும். உடலுக்கு தேய்த்து குளிப்பதால் அரிப்பு பிரச்னை நீங்கும்.

4.. தயிரை பயன்படுத்தி தலையில் ஏற்படும் அரிப்புக்கான மருந்து தயாரிக்கலாம். 

செய்முற:

வெள்ளை மிளகு பொடி கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது தயிர் சேர்த்து கலந்து தலையில் மசாஜ் செய்து குளித்துவர அரிப்பு குணமாகும். தலையில் அரிப்பு ஏற்பட்டால், சிறிது உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் தேய்த்து குளித்தால் அரிப்பு இல்லாமல் போகும்.
 

click me!