
நெல்லிக்காய் மற்றும் கற்றாழையில் அடங்கி இருக்கும் மருத்துவ நன்மைகள்
நெல்லிக்காய்
நெல்லிக்கனியில் வைட்டமின் சி உள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட சுமார் 25 மடங்கு சத்து அதிகமாக நெல்லிக்கனியில் உள்ளது.
இக்கனியில் பாஸ்பரஸ், கால்சியம், புரதச்சத்து, கொழுப்பு, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளது.
பல் தொடர்பான வியாதிகள், மலச்சிக்கல், எலும்புத்தாடை, நீர்த்தாரையில் உள்ள புண் போன்றவற்றை குணப்படுத்துவதில் இதன் பங்கு அதிகம்.
அதே போல் மூளைக்கோளாறு, இதய நோய், காசநோய், ஆஸ்துமா, நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்குவதில் இதன் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கற்றாழை
கற்றாழையில் உள்ள மருத்துவ குணங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
இதில் வைட்டமின்கள், கனிம சத்துகள், புரோட்டீன்கள், என்சைம்கள் சேர்த்து 70 வகையான மருத்துவ குணங்களுடைய உப பொருட்கள் உள்ளன.
மொத்தத்தில் கற்றாழை உடலிற்கு எனர்ஜியை தரக்கூடியது.
ரத்த ஓட்டத்தை சீராக்குவது.
மூளையில் ரத்தம் உறைந்த நோய் எதிர்ப்பு சக்திக்கு, அல்சர் போன்ற வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு, ஜீரண சக்திக்கு, தோல் பாதுகாப்புக்கு, தோல் பளபளப்புக்கு கற்றாழை நல்ல பயன் தருகின்றது.
தசைகள் மூட்டு இணைப்புகளில் திடத்தன்மை ஏற்படுத்துவதும் கற்றாழைதான்.