பெரும்பாலானோருக்கு ஏற்படும் மூன்று முக்கியமான பிரச்சனைகள் மற்றும் அதனை குணமாக்க உதவும் டிப்ஸ்...

 
Published : Nov 21, 2017, 01:57 PM ISTUpdated : Sep 19, 2018, 01:28 AM IST
பெரும்பாலானோருக்கு ஏற்படும் மூன்று முக்கியமான பிரச்சனைகள் மற்றும் அதனை குணமாக்க உதவும் டிப்ஸ்...

சுருக்கம்

The three most important problems for most people and the tips to help cure it.

உடல் தளர்ச்சி:

உடல் தளர்ச்சியை போக்க வெங்காயம் உதவும்.

வெங்காயத்தில் வைட்டமின் ஏ.பி.சி. ஆகியவை உள்ளன. உடல் தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகள் நீங்கும். 

இருதயத்தை வலுப்படுத்தும். 

உடலுக்கு சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியை திரும்பவும் தரக்கூடியது. 

இளமையைப் பாதுகாக்கும். 

நீரிழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து, காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது.

நரம்பு தளர்ச்சி நீங்க:

நரம்பு தளர்ச்சி சர்வ சாதாரணமாக எல்லோருக்கும் வருகிறது. 

மலச்சிக்கல், உறக்கமின்மை, நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், சத்தான உணவை உட்கொள்ளாமை போன்றவைகளால் நரம்பு தளர்ச்சி நோய் ஏற்படுகிறது.

நன்றாக உறங்க வேண்டும்.

மன அளவிலும், உடல் அளவிலும் உடலைப் பாதுகாக்க வேண்டும். 

உறங்குவதற்கு முன் அதிக நீரைப் பருக வேண்டும்.

தூங்குவதற்கு முன் சூடான பானம் எதுவும் அருந்த கூடாது. 

தொண்டைப்புண்: 
தொண்டைப்புண், சளி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு பனங்கற்கண்டு, சிறிது மிளகு, சீரகம், விரலி மஞ்சள் துண்டு ஆகியவை உதவும்.

மிளகு, சீரகத்தை வறுத்து பொடி செய்து கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது மஞ்சளைப் பொடியாக்கிவிட்டு மேற்கண்ட எல்லாவற்றையும் போட்டு கொதிக்க விடவும். 

பின் ஒரு டீஸ்பூன் வெண்ணெய்யை சேர்த்து கலக்கி குடித்தால் தொண்டையை தொல்லைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு ஏற்படும்.

PREV
click me!

Recommended Stories

Pomegranate Benefits : தினமும் தவறாமல் ஒரு கிண்ணம் 'மாதுளை' சாப்பிட்டால் இந்த '5' பிரச்சினைகள் கிட்ட கூட வராது!
Men’s Skincare : 30 வயசு முடிஞ்ச ஆண்கள் முதல்ல 'இதை' செய்ங்க! எப்போதும் இளமையா, ஆரோக்கியமா இருப்பீங்க