
1.. வயிற்றுப்புண்:
வயிற்றுப்புண் இருப்பவர்கள் பச்சரிசி, பாசிப்பருப்பு, வெந்தயம் ஒரு டீஸ்பூன், நிறைய பூண்டு போட்டு நன்றாக வேக வைத்து தேங்காய்ப்பால் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்புண்ணும், வாய்ப்புண்ணும் குணமாகிவிடும்.
2.. வலிப்பு நோய்:
வலிப்பு வந்தவுடன் பார்லி அரிசியில் இளநீரையும், தேனையும் கலந்து சாப்பிட்டால் நரம்பு பலமடைந்து வலிப்பு குணமாகும்.
3.. தலைவலி:
தலைவலி வந்தால் வெதுவெதுப்பான நீரில் சிறிது எலுமிச்சை சாறு, இஞ்சிச்சாறு கலந்து சிறிது உப்புடன் சேர்த்துப் பருகினால் தலைவலி உடனே குணமாகும்.
4.. குறட்டை
படுக்கும்போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்
பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.
நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்
புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.
மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.