
நமது உடம்பிற்கு போதுமான ஓய்வு, நாம் இரவில் சரியாக தூங்வதால் மட்டுமே கிடைக்கிறது. முறையாக தூக்கம் இல்லாத போது பலவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படுகின்றன. எனவே, இரவு நேரத்தில் படுத்ததும் தூக்கம் வருவதற்கு இந்த டீயை குடித்தால் நல்ல பயன் கிடைக்கும்.
வாழைப்பழ டீ தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் – 5
தண்ணீர் – 1 கப்
இலவங்கப் பட்டை – சிறிதளவு
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை தோல் உரித்து, அதை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊற்றி அதனுடன் பத்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதில் சிறிதளவு இலவங்கப் பட்டையை சேர்த்து இறக்க வேண்டும். பின் தயார் செய்த வாழைப்பழ டீயை, வடிக்கட்டி உறங்கச் செல்லும் முன்பு குடிக்க வேண்டும்.
இந்த வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவு இருப்பதால், இவை இரவில் நமக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது.