உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை போக்க உலர் திராட்சையை சாப்பிடலாம்...

 
Published : May 28, 2018, 02:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டை போக்க உலர் திராட்சையை சாப்பிடலாம்...

சுருக்கம்

Do you know Men can eat dry wine to get rid of erectile dysfunction ...

உலர் திராட்சை எண்ணற்ற நன்மைகளை கொண்டுள்ளது. உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. 

இந்த உலர் திராட்சையை எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களும், எவ்வித அச்சமும் இல்லாமல் சாப்பிடலாம். குறிப்பாக இதனை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

என்னென்ன பிரச்சனைகள் தீரும்?...

** இரத்த சோகை தீரும்

இதனை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வந்தாலோ அல்லது இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உலர் திராட்சையை உட்கொண்டு வந்தாலோ, இரத்தணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

** கொலஸ்ட்ரால் குறையும்

கருப்பு நிற திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை. எனவே அதனை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

** சிறுநீரக தொற்று குணமாகும்

சிறுநீரக பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால், அதை குணமாக்க ஆயுர்வேதம் பரிந்துரைப்பது இந்த வழியைத் தான். அது என்னவெனில் இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வருவது தான்.

** உடல் சூடு தணியும்

உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், ஒரு லிட்டர் தண்ணீரில் 25 உலர் திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, நாள் முழுவதும் அந்த நீரைக் குடித்து, உலர் திராட்சையை உட்கொண்டு வந்தால், விரைவில் உடல் வெப்பம் தணியும்.

** மலச்சிக்கல் தீரும்

மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், ஒரு கப் நீரில் 25 உலர் திராட்சையைப் போட்டு கொதிக்க விட்டு இறக்கி, மசித்து, அதில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால், மலச்சிக்கலில் இருந்து விரைவில் விடுபடலாம். கர்ப்ப காலத்தில் இப்பிரச்சனையை கர்ப்பிணிகள் அதிகம் சந்திப்பார்கள். எனவே கர்ப்பிணிகளும் இந்த முறையைப் பின்பற்றலாம்.

** மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு

பெண்கள் மாதவிடாய் காலத்தில் வயிற்றுப் பிடிப்பு மற்றும் அதிப்படியான இரத்தப்போக்கினால் கஷ்டப்படுவார்கள். அவர்கள், தினமும் ஊற வைத்த உலர் திராட்சையை நீருடன் எடுத்து வந்தால், மாதவிடாய் பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

* ஆண்கள் விறைப்புத்தன்மை நீங்கும்

ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் கஷ்டப்பட்டால், தினமும் உலர் திராட்சையை ஒரு கையளவு உட்கொண்டு வந்தால், இப்பிரச்சனை நீங்கும்.

PREV
click me!

Recommended Stories

Weight Loss Without Workout : உடற்பயிற்சி இல்லாமல் 'எடையை' கட்டுக்குள் வைக்க 'இப்படியும்' செய்யலாம்! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க
மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க