
தலைமுடி உதிர்வதைத் தடுக்க ஏராளமான இயற்கை வழிகள் இருந்தாலும், வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லிக்காயைப் போன்று எந்த ஒரு பொருளாலும் குணமளிக்க முடியாது.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க நெல்லிக்காயைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடுவது? என்று பார்க்கலாம்.
மாஸ்க் #1
தேவையான பொருட்கள்:
நற்பதமான நெல்லிக்காய் – 3-4
சீகைக்காய் – 3-4
செய்முறை:
இரவில் படுக்கும் முன் 1/2 கப் நீரில் நெல்லிக்காய் மற்றும் சீகைக்காயில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்கு தடவி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் நன்கு தேய்த்து அலச வேண்டும். குறிப்பாக இந்த மாஸ்க்கை போட்ட பின் ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. இந்த மாஸ்க்கை ஒரு நாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்துவதன் மூலம் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மாஸ்க் #2
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய் – 3-4
ஜொஜோபா பூக்கள் மற்றும் இலைகள் – 3-4
செய்முறை:
நெல்லிக்காய் விதைகளை நீக்கிவிட்டு, அத்துடன் ஜொஜோபா இலை மற்றும் பூக்களைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்து தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
மாஸ்க் #3
தேவையான பொருட்கள்:
முட்டை – 1
நெல்லிக்காய் – 4
நீரில் ஊற வைத்த வெந்தயம் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் முட்டையை ஒரு பௌலில் போட்டு நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். நெல்லிக்காய் மற்றும் வெந்தயத்தை நன்கு அரைத்து முட்டையுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி ஷவர் கேப் அணிந்து 1 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு கிளின்சர் பயன்படுத்தி தலைமுடியை நன்கு அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு 2 முறை பின்பற்றினால், தலைமுடி உதிர்வது நிற்பதோடு, தலைமுடியும் நன்கு வளரும்.