உங்களுக்குத் தெரியுமா? அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகும்…

Asianet News Tamil  
Published : Apr 11, 2017, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
உங்களுக்குத் தெரியுமா? அரிசி கழுவிய தண்ணீரை முகத்திற்கு பயன்படுத்தினால் முகம் பளபளப்பாகும்…

சுருக்கம்

Did you know? If you use the face to face water used for rice to glow

அரிசி கழுவிய தண்ணீர் உடலுறுதி மட்டுமல்ல, அழகு பராமரிப்பிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

அரிசியை நன்றாக 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும்,

பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்ட வேண்டும்.

பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும். 

அரிசி கழுவியநீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். 

அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும்.

கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிதுநேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.  இதனால் கூந்தலின் மென்மைத் தன்மை அதிகரிக்கும்.  முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks
குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லை வரக் காரணம்/DrJagadeeswariRajalingam.BSMS.,