தொப்பை இல்லாமல் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இந்த டிப்ஸ்...

 
Published : Apr 11, 2017, 02:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
தொப்பை இல்லாமல் உடல் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பும் பெண்களுக்கு இந்த டிப்ஸ்...

சுருக்கம்

try these tips to get fat less body


சரிவிகித நீர்ச்சத்து: 

அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.

தொடர்ச்சியான உணவுக்கு முற்றுப்புள்ளி:

தொப்பை இருக்கிறது என்பதற்காக, உணவு உண்ணாமல் தவிர்ப்பது ஆபத்தானது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். எனவே சரியான நேரத்திற்கு, சரிவிகித சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

உற்சாகமான நடை:

தொப்பை வயிறு குறைய, தினசரி அரைமணி நேரமாவது உற்சாகமாக நடக்க வேண்டும். இது இதயத்திற்கும் இதமான ஒரு உடற்பயிற்சி. நடை பயிற்சியானது தொப்பையை கரைப்பதோடு அன்றைய நாளை உற்சாகத்துடன் நடத்திச் செல்லும்.

நீச்சல்:

நீச்சலானது உடலை உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். இது உற்சாகமான உடற்பயிற்சியும் கூட. இதனால் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

பழங்கள், காய்கறிகள்:

நமது அன்றாட உணவில், பழங்கள், காய்கறிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். அவற்றில் உள்ள நார்ச்சத்தானது உடலுக்கு நன்மையை ஏற்படுத்துகிறது.

தாது உப்புக்களும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளதால் உடலின் ஜீரணமண்டல இயக்கத்தை சரியாக நடைபெறச் செய்கின்றன.

செயற்கை குளிர்பானங்கள்: 

வயிற்றில் தொப்பை போடுவதற்கு, செயற்கை குளிர்பானங்களும் மிக முக்கியமான காரணமாகும். இதில் உள்ள ஆல்கஹால் அதிக அளவு கலோரிகளை கொண்டுள்ளது. ஜூஸ், சோடா போன்றவற்றில் அதிக அளவு சர்க்கரை உபயோகப் படுத்தப்படுகிறது. இது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. வயிற்றில் தொப்பை சேருகிறது.

எனவே இலைபோல வயிறு வேண்டும் என்பவர்கள் நொறுக்குத்தீனி, குளிர்பானங்கள் போன்றவைகளை உட்கொள்ளாமல் கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் அழகான மாற்றம் தெரியும்.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க