உங்களுக்குத் தெரியுமா? எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவு…

 
Published : Apr 07, 2017, 01:55 PM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
உங்களுக்குத் தெரியுமா? எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவு…

சுருக்கம்

Did you know? Green Apple is a great food for losing weight ...

1.. இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடக்கியது பச்சை நிற ஆப்பிள்.

2.. பச்சை ஆப்பிளில் நிறைய நார்ச்சத்துக்கள் இருப்பதால், குடலை சுத்தம் செய்வதிலும் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இது தடையற்ற குடல் இயக்கத்திற்கு உதவுகிறது.

3.. பச்சை ஆப்பிள்கள் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது. அதிலும் ஆப்பிள்களில் இருக்கும் நுண்ணூட்டச் சத்தான இரும்புச்சத்து இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவை உயர்த்த உதவுகிறது.

4.. எடையை குறைக்க முயலுபவர்களுக்கு பச்சை ஆப்பிள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. அதிலும் அத்தகையவர்கள் ஒவ்வொரு நாளும் உணவில் ஒரு ஆப்பிளை சேர்க்க வேண்டும்.

5.. இது இரத்த நாளங்களில் கொழுப்பு சேர்வதை தடுத்து, இதயத்திற்கு சரியான இரத்த ஓட்டத்தைப் பராமரிக்க உதவுகிறது.

6.. பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு படிப்படியாக குறையும்.

7.. பச்சை ஆப்பிளில் விட்டமின் சி நிறைந்து காணப்படுவதால், இது கட்டற்ற தீவிர மூலக்கூறுகளால் சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்க உதவுகிறது. இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது.

8.. பச்சை ஆப்பிள்கள் மூப்படைதலுக்கு எதிரான ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது. இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது.

9.. பச்சை ஆப்பிள்கள் முகப்பருவிற்கு எதிரான சிகிச்சையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அதிலும் பச்சை ஆப்பிள்களை வழக்கமாக உண்பதால், பருக்கள் வெடிப்பதை கட்டுப்படுத்துவதோடு, பருக்கள் வருவதைத் தடுக்க உதவுகிறது. பச்சை ஆப்பிள் கண்ணைச் சுற்றி ஏற்படும் கருவளையங்களை நீக்கி, கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது.

10.. பச்சை ஆப்பிள்கள் முடிகளை வலுப்படுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரித்து மற்றும் முடி உதிர்தலைத் தடுக்க உதவுகின்றது.

PREV
click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க