diabetic problem: சர்க்கரை நோயாளிகள் மறந்தும் கூட செய்யக்கூடாத சில தவறுகளை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
நீரிழிவு நோய் எனும் சர்க்கரை வியாதி என்பது பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் பாதிக்கப்படும் நோயாக மாறிவிட்டது. இந்த சர்க்கரை நோய்க்கு இதுவரை நிரந்தர தீர்வு இல்லை. உணவு முறையும், வாழ்க்கை முறையும் சரியாக இருக்கும் வரை இந்த நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால் இந்த நோயின் சிக்கலை அதிகரிக்க ஒரு சிறிய தவறு போதும். ஆகவே தான், நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள்.
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. அது நீரிழிவு வகை 1 மற்றும் வகை 2. உங்கள் உணவில் கொஞ்சம் கவனம் செலுத்தினால், அதைக் கட்டுப்படுத்தலாம். இது குறித்து இன்றைய பதிவில் சில தகவல்களை காணலாம். இதைப் புறக்கணிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு கடுமையானதாக இருக்கும்.
உணவு கவனம்
நீரிழிவு நோயாளிகள், தங்கள் உணவில் கட்டுப்பாடு இல்லாமல் விரும்பியதைச் சாப்பிட்டால் சர்க்கரை அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது. சிலர் அப்படி இஷ்டத்திற்கு சாப்பிட்டு விட்டு, சுகர் மாத்திரை சாப்பிட்டால் போதும் என நினைக்கிறார்கள். அது தவறு. நாம் அளவுக்கு மீறி உண்ணும் போது இரத்தத்தில் சர்க்கரை அளவு சட்டென அதிகரிக்கும். நல்ல உணவுகளை உண்ணுங்கள். உதாரணமாக ஆப்பிள் சத்து என்பதற்காக 2 அல்லது 3 ஆப்பிள்கள் சாப்பிடுவது சர்க்கரை அளவை கூட்டி விடும். ஒரு ஆப்பிள் அல்லது சில துண்டுகள் மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். எந்த உணவும் அதிகம் சாப்பிட்டால் டேஞ்சர்!!
இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை தான்.! ஏப்ரல் மாதம் வந்தால் டாப் லெவலுக்கு போய்டுவாங்க.!
உடற்பயிற்சி/ நடைபயிற்சி
நீரிழிவு நோயாளிகள் தங்கள் வாழ்க்கைமுறையில் சில முக்கியமான வேலைகளை தவறாமல் செய்ய வேண்டும். அதில் உடற்பயிற்சி முக்கியமானது. உடற்பயிற்சி செய்ய முடியவில்லையா? நடைபயிற்சியாவது செய்யுங்கள். இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதோடு நீங்கள் சுறுசுறுப்பாக உணருவீர்கள். நீங்கள் தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்க வேண்டும். மிதமான உடற்பயிற்சி செய்யலாம்.
பருவகால பழங்கள் வேண்டாம்..!
நீரிழிவு நோயாளிகள் இனிப்புப் பொருட்களை சாப்பிடுவது கூடவே கூடாது. இனிப்புகள் என்றாலே நீங்கள் பழங்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. நீங்கள் சாப்பிட வேண்டிய பல பழங்கள் உள்ளன. கொய்யா, ஆரஞ்சு, கிவி, ஆப்பிள், பேரிக்காய் மற்றும் பப்பாளி ஆகியவை நீங்கள் அளவோடு உண்ணலாம். மாம்பழம் மாதிரியான சீசன் பழங்கள் வேண்டாம்.
இந்த விஷயங்களை மீறினால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிவிடும்.
இதையும் படிங்க: தர்பூசணியை இந்த 1 பொருளுடன் சேர்த்து சாப்பிட்டால்... ரெண்டு மடங்கு நன்மை கிடைக்கும்.. நிபுணர் சொல்றத கேளுங்க!!