இந்த காய்கறிகளை வைத்து நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்; வராமல் கூட தடுக்கலாம்...

First Published Jun 13, 2018, 1:20 PM IST
Highlights
Diabetes can be controlled by these vegetables Even stopping ...


ப்ராக்கோலி :-

உலகிலேயே மிகவும் சத்தான காய்கறிகளில் ப்ராக்கோலிக்குத் தான் முதலிடம். இதிலுள்ள சல்ஃபோரபேன் என்ற கூட்டு வேதிப் பொருள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகளும், அவ்வியாதியைத் தடுக்க நினைப்பவர்களும் தங்கள் உணவில் கண்டிப்பாக ப்ராக்கோலியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பசலைக் கீரை :-

பசுமையான கீரை வகைகள் அனைத்துமே நீரிழிவைக் கட்டுப்படுத்துவதில் வல்லவை. குறிப்பாக, பசலைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயே நமக்கு வராமல் தடுத்து விடலாம் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பீட்ரூட் :-

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பீட்ரூட் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இது பெரிதும் உதவுகிறது. எனவே நாம் எல்லோரும் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு :-

இந்தக் கிழங்கில் உள்ள ஆந்தோசையனின் என்ற பொருளுக்கும், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. எரிச்சல் மற்றும் வைரஸுக்கு எதிரான பண்புகளும் இக்கிழங்கில் நிறைந்திருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அருமையான உணவாகும்.

முட்டைக்கோஸ்:-

நீரிழிவு நோயைத் தடுப்பதில் முட்டைக்கோஸுக்கும் ஒரு முக்கியப் பங்கு உண்டு. இரத்தத்தில் உள்ல சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கணையங்களின் முறையான இயக்கத்திற்கும் அது உதவுகிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்தும் இன்சுலினை சுரப்பதே இந்தக் கணையங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பீன்ஸ் :-

நமக்கு மிகவும் எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் பீன்சும் ஒன்றாகும். நீரிழிவுக்கு எதிரான பண்புகள் பீன்ஸில் நிறைய உள்ளன.

கேரட் :-

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டினுக்கும் ஒரு முக்கியப் பங்கு உள்ளது. மேலும், கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

பூண்டு :-

பூண்டில் உள்ள மருத்துவக் குணங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. நீரிழிவைத் தடுப்பதிலும் பூண்டு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால்களைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் பூண்டு குறைக்கிறது.
 

click me!