டெங்கு காய்ச்சல்.. என்னென்ன சாப்பிட வேண்டும்? நிபுணர்கள் சொல்லும் முக்கிய தகவல்கள்!!

By Ma riya  |  First Published May 17, 2023, 2:40 PM IST

டெங்கு காய்ச்சல் வந்தால் அதன் பிறகு வேறு நோய்கள் வருமா? டெங்கு ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும், வரும் முன் காப்பது எப்படி முழுவிவரங்கள்... 


டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் கணிசமான மக்கள் பாதிப்புக்கு ஆளாகிவிடுகின்றனர். மோசமான நிலையில் டெங்கு உயிரிழப்பையும் ஏற்படுத்தும். டெங்குவின் ஆபத்துகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி தேசிய டெங்கு தினம் அனுசரிக்கப்படுகிறது.

சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் குழு மக்களை எச்சரித்தது. இந்தியாவில் பரவும் டெங்கு வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்த மாற்றங்கள் கடுமையான நோயை உருவாகும் அபாயத்தை சுட்டிக்காட்டுகின்றன. வைரஸில் சில மாற்றங்கள் காணப்படுகின்றன. இது முன்பு நினைத்ததை விட தீவிர நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். 

Latest Videos

undefined

நாட்டில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் டெங்கு நோய் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுவதால், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். PLOS Pathogens என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், இந்திய துணைக் கண்டத்தில் கடந்த சில தசாப்தங்களாக இந்த நோயை ஏற்படுத்தும் வைரஸ் வியத்தகு முறையில் உருமாறியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

இந்திய அறிவியல் கழகம் (IISc) தலைமையிலான விஞ்ஞானிகளின் குழு, டெங்கு வைரஸ் இந்தியாவில் தீவிர நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம் என எச்சரித்துள்ளது. IISc இன் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையின் (CE) இணைப் பேராசிரியர் ராகுல் ராய் என்பவர் கூற்றின்படி, “இந்த ஆய்வில், இந்தியாவில் காணப்படும் டெங்கு பாதிப்பு எவ்வளவு வித்தியாசமானது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்தோம். அதில் நிறைய வேறுபாடுகள் இருப்பதைக் கண்டறிந்தோம். வித்தியாசம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் வைரஸ் மாறிவிட்டது. 

2012ஆம் ஆண்டு வரை, அதன் முக்கிய மாறுபாட்டின் நோய் பாதிப்புகள் இந்தியாவில் அதிகமாக இருந்தன, இருப்பினும் அதன் பிறகு புதிய விகாரங்களின் ஆபத்து அதிகரித்து வருவதைக் காணலாம். இதன் காரணமாக தீவிர நோய்களை உருவாக்கும் அபாயமும் அதிகமாக இருக்கலாம். டெங்கு தடுப்பு நடவடிக்கையில் அதிக விழிப்புணர்வை காட்ட வேண்டும்"என்றார். 

டெங்கு வைரஸ் பாதிக்கப்பட்ட ஏடிஸ் வகை கொசு நம்மை கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. இந்த கொசுக்கள் ஜிகா, சிக்குன்குனியா, பிற வைரஸ்களையும் பரப்புகின்றன. டெங்கு கொசுக்கள் பகலில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். 

அறிகுறிகள் 

ஏடிஸ் கொசு கடித்தால் தீவிர காய்ச்சல், வாந்தி-வயிற்றுப்போக்கு, உடல், தசை வலியும், உடலுக்குள் இரத்தப்போக்கு காரணமாக மலத்தில் ரத்தம் வெளியேறுதல் ஆகிய அறிகுறிகள் காணப்படும்.  

டெங்கு காய்ச்சலில் மீள உணவுகள் 

ஆன்டி இம்பிளமேட்டரி, பூஞ்ஜை எதிர்ப்பு பண்புகள் அதிகம் கொண்ட மசாலா பொருள்களான மிளகு, ஏலக்காய், லவங்கப்பட்டை, மஞ்சள், இஞ்சி போன்றவை உண்ணலாம். இவை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கும். ஓட்ஸ், பப்பாளி இலை சாறு, மாதுளை, இளநீர், யோகர்ட், ப்ராக்கோலி, ஹெர்பல் டீ (புதினா, ஏலக்காய், லவங்கப்பட்டை, இஞ்சி) போன்றவை டெங்கு பாதித்தவர்கள் உண்ணக் கூடியது. 

இதையும் படிங்க: மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க! பிரண்டையை எவ்வாறு பயன்படுத்தணும் தெரியுமா?

டெங்கு தடுப்பு நடவடிக்கை 

டெங்கு காய்ச்சலை தடுக்கும் முறைகளில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

  • டெங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட சிகிச்சையோ, தடுப்பூசியோ இல்லாததால், தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கவனமாக கடைபிடிக்க வேண்டும். 
  • வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்கவும், தண்ணீர் தேங்காமல் இருக்கவும்.
  • உங்கள் கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வையுங்கள். 
  • தண்ணீர் தொட்டியில் நீர் தேங்கி இருந்தால் மூடி வைத்து பராமரியுங்கள். 
  • கொசு கடிப்பதை தவிர்க்க முழுக் கை ஆடைகளை அணியவும்.
  • கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க வீட்டைச் சுற்றி பூச்சிக்கொல்லிகளை தெளிக்கவும்.
  • டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். 

இதையும் படிங்க: கோடைகாலத்தில் உடலை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!

click me!