
தொப்பையை குறைக்க என்னதான் உடற்பயிற்சி செய்தாலோ, உணவில் மாற்றங்கள் செய்தாலோ தொப்பை குறைக்கவே முடியவில்லை என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா? இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அடுத்ததாக என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? ஓடுதல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் இந்த இரண்டும் உங்களுக்கு கைகொடுக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை. இவை இரண்டு மணி தொப்பையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இப்போது கேள்வி என்னவென்றால், இவை இரண்டில் எது சிறந்தது என்பது தான்.
தொப்பை :
தொப்பை உடல் தோற்றத்தை கெடுப்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. வயிற்றில் அதிக கொழுப்பு சேர்ந்தால் சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும். இதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் மாற்றங்கள் செய்வதுடன் உடல் செயல்பாடு மிகவும் அவசியம். இப்போது இந்த பதிவில் தொப்பையை வேகமாக குறைக்க ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் இவை இரண்டில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஓடுதல் நன்மைகள்
- ரன்னிங் என்பது கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். தினமும் சுமார் ஒரு மணி நேரம் 400 கலோரிகள் எரிக்கப்படும். உடலில் உள்ள மொத்த கொழுப்பையும் எதிர்க்க ரன்னிங் மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள பயிற்சியாகும். இது தவிர உடல் எடையும் குறையும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வு. இதனுடன் ஆரோக்கியமான உணவு முறையையும் இணைத்துக் கொண்டால் வேகமாக கொழுப்பு கரையும், எடையும் குறையும்.
- ஓடுதல் இரத்த ஓட்டத்தை மற்றும் ஆக்சிஜன் சுழற்சியை அதிகரிக்கும். மேலும் இதயத்துடிப்பை வேகமாக உயர்த்தும். இதனால்இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், நுரையீரல் செயல்பாடு மேம்படு மற்றும் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
- தினமும் ஓடுதல் மூலம் எலும்புகள் குறிப்பாக இடுப்பு மற்றும் கால் எலும்புகள் வலிமையை பெறும். எதிர்காலத்தில் எலும்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும் அபாயம் குறையும்.
- ஓடுதல் கால்கள் மற்றும் தசைகளை வலுவாக உதவுகிறது. மேலும் உடலை உறுதியான தோற்றத்திற்கு மாற்றும்.
சைக்கிள் ஓட்டுதல் நன்மைகள் :
- சைக்கிள் ஓட்டும்போது இதயத்துடிப்பு அதிகரிக்கும், இரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் சுழற்சியும் மேம்படும். இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே தினமும் சைக்கிள் ஓட்டி வந்தால், மாரடைப்பு போன்ற இதய நோய் பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் குறையும்.
- தினமும் ஒரு மணி நேரம் சைக்கிள் ஓட்டி வந்தால் சுமார் 300 கலோரிகள் எரிக்கப்படும். கூடவே ஆரோக்கியமான உணவு முறை இணைத்துக் கொண்டால் உடலில் இருக்கும் ஒட்டுமொத்த கொழுப்பும் குறையும். எனவே தொடர்ந்து சைக்கிள் ஓட்டுவதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைவது மட்டுமல்லாமல், உடல் எடையும் குறையும்.
- தொடர்ந்து சைக்கிள் ஓட்டி வந்தால் தொடை எலும்பு மற்றும் முழங்கால்களுக்கு கீழே உள்ள பகுதி வலுப்பெறும்.
- உடல் பருமன் மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சைக்கிள் ஓட்டுதல் சிறந்த தேர்வாக இருக்கும்.
எது சிறந்தது?
ரன்னிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் இவை இரண்டுமே தொப்பையை குறைக்க மிகவும் சிறந்த பயிற்சிகள் தான். ஆனால் இவை இரண்டில் எது உங்களுக்கு செட் ஆகும் என்று நிதானமாக யோசித்து உங்களுக்கான பயிற்சியை தேர்வு செய்யவும். அதை சீராக செய்தால் தான் அதற்குரிய பலனை முழுமையாக பெறுவீர்கள். அவ்வப்போது செய்வது இடைவெளி எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்யவேக்கூடாது. உடற்பயிற்சி வந்துவிட்டால் அதை தொடர்ந்து செய்தால் மட்டுமே நன்மைகளை பெறுவீர்கள். இவை எல்லாவற்றை விட உணவு முறை ரொம்பவே முக்கியம். எனவே உடல் எடையை அதிகரிக்காமல் குறைவான கலோரியை மட்டுமே சாப்பிடுங்கள். அதே சமயம் ஆற்றலை தரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.