நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

Published : Apr 14, 2023, 07:35 AM IST
நகங்களின் நிறத்தை என்ன நினைச்சிங்க! அதை வைத்தே உங்க ஆரோக்கியத்தை சொல்லலாம்.. உங்க நகம் எப்படி இருக்கு பாருங்க!

சுருக்கம்

நகங்களின் நிறம், தோற்றம் ஒருவரின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும். இங்கு நகங்களின் நிறங்கள், அவை எதைக் குறிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

ஒருவரின் கண்கள் வெளிறிப் போய் காணப்பட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லை என்று அர்த்தம். இடது கை வலித்தால் இதய பிரச்சனைகளுக்கான எச்சரிக்கை. அந்த வரிசையில் நகங்கள் நமக்கு என்ன சொல்கின்றன? என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.  

இளஞ்சிவப்பு

ஆரோக்கியமான நபரின் நகங்கள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும். இது நல்ல இரத்த ஓட்டத்தைக் குறிக்கிறது. கவலைப்பட தேவையில்லை. 

மஞ்சள் 

உங்களுடைய நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு பூஞ்சை தொற்று அல்லது தோல் அழற்சி இருப்பதை தான் அது காட்டுகிறது. மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் இது. கவனம்! 

நீலம் அல்லது ஊதா

இந்த நிறத்தில் நகங்கள் இருக்குமா என்று நினைக்கிறீர்களா? இருக்கும் என்பது தான் பட்டவர்த்தனமான உண்மை. நீலம் அல்லது ஊதா நிறத்தில் நகங்கள் இருந்தால் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கலாம் அல்லது இரத்தத்தில் குறைந்த ஆக்ஸிஜன் அளவைக் குறிக்கலாம். 

வெள்ளை

ஒருவருக்கு முழுக்க முழுக்க வெள்ளை நிறத்தில் நகங்கள் காணப்பட்டால் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பதை குறிக்கும். அப்படியில்லையென்றால் இரத்த சோகையைக் குறிக்கலாம். கவனமாக இருங்கள். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவை எடுத்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!

வெளிறிய நகங்கள்

வெளிறிய அல்லது கிட்டத்தட்ட ஒளிஊடுருவக்கூடிய நகங்கள் உங்களுக்கு இருந்தால் அதுவும் இரும்புச்சத்து குறைபாடு தான். இது இரத்த சோகையைக் குறிக்கலாம். 

நகங்களில் பழுப்பு அல்லது கருப்பு கோடுகள்

  • நகங்களில் பழுப்பு அல்லது கருப்பு கோடுகள் இருப்பது மெலனோமா என்ற தோல் புற்றுநோயைக் குறிக்கலாம். எச்சரிக்கையாக இருங்கள். 
  • உங்களுடைய நகங்களில் கிடைமட்ட கோடுகள் காணப்பட்டால் அது உங்களுக்கு கடுமையான மன அழுத்தம் அல்லது காயம் இருப்பதை குறிக்கும். எது எப்படியோ ஆரோக்கியமான இளம்சிவப்பு நிற நகங்களை தவிர மற்ற நிறத்தில் இருக்கும் நகங்களை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுவது அவசியம். 

இதையும் படிங்க: வெந்தயம் நம் உடலில் இவ்வளவு வேலைகளை செய்யுமா? 1 கைப்பிடி வெந்தயத்தில் மறைந்திருக்கிறது இத்தனை நன்மைகள்!!

PREV
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?