கிராம்பு நன்மையைத் தான் செய்யும் எனினும், அதை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கெடுக்கும் நேரும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கிராம்பு பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. கிராம்பை அப்படியே மென்றும் சாப்பிடலாம்; மசாலாவாகவும் பயன்படுத்தலாம். கிராம்பு தண்டுகள் அல்லது உலர்ந்த பூ மொட்டுகளை உணவில் பயன்படுத்தி வருகிறோம். இதிலிருந்து தயாரிக்கப்படும் கிராம்பு எண்ணெய் பல மருத்துவ பலன்களை அள்ளிக் கொடுக்கிறது. ஆரோக்கியத்திற்கு மிகவும் பலனளிக்கும் கிராம்பு நன்மையைத் தான் செய்யும் எனினும், அதை எப்படி சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு கெடுக்கும் நேரும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கிராம்பை அளவுக்கு மீறி உட்கொள்ள கூடாது
கிராம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பதற்காக, அதிகளவில் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியத்தை அள்ளித் தரும் உணவுகளை கூட, மிதமான அளவில் தான் சாப்பிட வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கியமானதாக கருதப்படும் உணவுப் பொருட்களே, ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கும் எதிரியாக மாறிவிடும். பலரும் கிராம்பு போட்டு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பார்கள். இது அளவுடன் இருந்தால், அமிர்தமாக செயல்படும். ஆனால், அதுவே அளவுக்கு மீறினால் ஆரோக்கியத்திற்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.
அதிகளவில் கிராம்பை உட்கொள்ளும் போது, சிலருக்கு அலர்ஜியைத் தூண்டலாம். கிராம்புகளில் யூஜெனோல் இருப்பதன் காரணணத்தால் ஒவ்வாமையையும் தூண்டும். இதிலிருக்கும் கலவை, உடலில் இருக்கும் புரதங்களுடன் வினைபுரியும் சமயத்தில், சருமத்தில் அழற்சியை ஏற்படுத்துகிறது. இது உடலின் சில பகுதிகள் அல்லது வாய்வழி குழியில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கிராம்பை அதிகமாக உட்கொண்டால் நாக்கில் வலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது
இரத்த சர்க்கரை குறைவைத் தடுக்கும் பண்புகளை கிராம்பு கொண்டுள்ளது. இது உயர் இரத்த சர்க்கரை பாதிப்பு இருப்பவர்களுக்கு நல்லது. ஆனால், ஏற்கனவே இரத்த சர்க்கரை அளவு குறைவாக இருப்பவர்களுக்கு நல்லதல்ல. ஆகவே, சர்க்கரை அளவு குறைபவர்கள், அதிகளவில் கிராம்பை பயன்படுத்த கூடாது என பரிந்துரைக்கப்படுகிறது.
சளி, இருமலை விரட்டி அடிக்க - கல்யாண முருங்கை இலைபூரி !
மருந்துகளுடன் கிராம்பு எதிர்வினையாற்றும்
நோயாளிகள் மருந்து சாப்பிடுவதால், அதிக கிராம்பு ஆபத்தை ஏற்படுத்தும். சில மருந்துகளுடன், கிராம்பு வினைபுரிந்து உடல் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அதிகமாக கிராம்பு சாப்பிட்டால், அது இரத்தப் போக்கைத் தூண்டி சிக்கலை அதிகரிக்கிறது.