குளிர்காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க இதைச்செய்தால் போதும்..!!

By Dinesh TG  |  First Published Nov 17, 2022, 2:57 PM IST

பல நுண்ணுயிர் பாதிப்புகளை தடுப்பதற்கும், எந்தவிதமான கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்கவும், அழற்சி உள்ளிட்ட  உடல் உபாதைகள் வராமல் இருப்பதற்கும் இலவங்கப்பட்டை பெரிதும் உதவுகின்றன.
 


இந்திய சமையலறைகளில் பல்வேறு மசாலா பொருட்கள் கொண்டு உணவுகள் சமைக்கப்படுகின்றன. அந்த அனைத்து மசாலாப் பொருட்களிலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அவற்றை முறையாக பயன்படுத்தும்போது, மசாலா பொருட்கள் மூலம் முழுமையான பலன்கள் நமக்கு கிடைக்கின்றன. அன்றாடம் நாம் சமையலில் பயன்படுத்தும் பொருள் இலவங்கப்பட்டை. வெறும் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல், இதனால் சரும நலனும் கூடுகிறது. இதிலிருக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள், உடலுக்கு பல்வேறு வழிகளில் நன்மை செய்கின்றன. இதை குளிர்காலத்தில் பயன்படுத்தும் போது, முகத்துக்கான சருமப் பொலிவு பன்மடங்கு கூடுகிறது.

பயன்பாடு என்ன?

Latest Videos

undefined

உணவை சுவையாகவும் நறுமணம் கொண்டதாக மாற்றுவதற்கும் இலவங்கப்பட்டை பெரிதும் பயன்படுகிறது. ஆரோக்கியத்துக்கு பல்வேறு வகையில் நன்மை சேர்க்கும் இதை, அழகு பராமரிப்புக்காகவும் பயன்படுத்தலாம். இதை முறையாக பயன்படுத்தும்பட்சத்தில் முகம் பளபளப்படைகிறது. அதனால் உடலில் பொலிவு கூடுகிறது.

எப்படி பயன்படுத்தலாம்?

ஒரு தேக்கரண்டியில் தேனைக் எடுத்துக்கொண்டு, அதில் இலவங்கப்பட்டை பொடியை சேர்க்கவும். இலவங்கத்தை வாங்கிவந்து பொடி செய்யலாம் அல்லது கடைகளில் ரெடிமேடாக பாக்கெட்டுகளில் இப்பொடி கிடைக்கிறது. சிறுது நேரம் ஊறவைத்து, முகத்தில் தடவவும். அந்த கலவையை முகத்தின் அனைத்து பகுதிகளிலும் மெதுவாக தடவி விடவும்.

சருமத்தில் அரிப்பு தோன்றினால் லேசாக எடுத்துவிட வேண்டும்- புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்..!!

மாற்று வழி என்ன?

சிலருக்கு தேன் பிடிக்காது அல்லது தேன் சேராது அல்லது தேன் கிடைக்காது. அப்படிப்பட்ட சூழலில் இலவங்கப்பட்டை பொடியில் தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல் கொண்டு பேஸ்டு செய்யலாம். சிறுதுநேரம் ஊறவைத்து, அந்த கலவையை முகத்தில் நன்றாக தடவி மசாஜ் செய்து காயவிடவும்.

ஊட்டச்சத்துக்கள் என்ன?

இலவங்கப்பட்டையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. அதனால் இதை முகத்தில் தடவும் போது, உடனடியாக இறந்துபோன செல்கள் நீக்கப்படுகின்றன. அது சருமத்துக்கு புத்துணர்ச்சியை தருகிறது. குறிப்பிட்ட இந்த செய்முறைக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். காலை முற்பகல் நேரம் அல்லது பிற்பகல் 3 மணியளவில் இந்த செய்முறையை செய்து பாருங்கள். வாரமிருமுறை இவ்வாறு செய்யும் பட்சத்தில், விரைவாக முகம் பொலிவுப் பெற துவங்கும். 

click me!