Madras Eye : வேகமெடுக்கும் மெட்ராஸ்-ஐ பரவல்! - தெரிந்துகொள்ள வேண்டிய தடுப்புமுறைகள்!

By Dinesh TGFirst Published Nov 17, 2022, 10:31 AM IST
Highlights

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ராஸ்-ஐ நோய் பரவி வருகிறது. இந்த நோய் ஒரு தொற்றுவியாதி என்பதால் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தடுப்பு முறைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
 

கண் விழி மற்றும் இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் ஒரு வித வைரஸ் தொற்றால் ‘மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. இந்த நோய் வந்தவர்களுக்கு கண் எரிச்சல், வீக்கம், கண் உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் நீர் வடிதல், இமைப்பகுதிகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

தொற்று நோய்

இந்த மெட்ராஸ்-ஐ கண் நோய்த் தொற்றானது எளிதில் ஒருவரிடம் இருந்து அடுத்தவர்களுக்கு பரவக்கூடியது. இதில் 3 வகைகள் உண்டு. பருவ காலத்தில் ஏற்படுகிற ஒவ்வாமை தொற்று. இது தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும். 2வது நுண்ணுயிரி அல்லது நச்சுயிரி தொற்றால் ஏற்படுவது. 3வது அழுக்கு, நீச்சல் குளத்திலுள்ள குளோரின் போன்ற எரிச்சலூட்டிகளால் காரணமாக ஏற்படுவது.

மெட்ராஸ்-ஐ & அறிகுறிகள்

கண் விழி மற்றும் இமையை இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்றால் ‘மெட்ராஸ் ஐ’ ஏற்படுகிறது. இந்த நோய் பாதிப்புள்ளவர்களுக்கு கண்களில் எரிச்சல், கண் வீக்கம், கண் உறுத்தல், விழிப்பகுதி சிவத்தல், கண்ணில் வடிதல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டியது அவசியம்.

அழற்சி, ஆஸ்துமா பிரச்னைகளில் இருந்து விடுபட உதவும் வெள்ளைப் பூசனிக்காய்..!!

கண் சிவத்தல்

கண்கள் சிவந்து போயிருந்தால் அது `மெட்ராஸ்-ஐ’ஆக மட்டுமே இருக்க வேண்டியதில்லை. கருவிழியில் பிரச்னை அல்லது கண் அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளாகவும் இருக்கலாம். ஏனவே, கண் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

பொதுவாக சிலர் `மெட்ராஸ்-ஐ’தானே என்று அலட்சியப்படுத்தி, மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி சுய மருத்துவம் செய்துகொள்கிறார்கள் இது முற்றிலும் தவறு. பிறகு, கண் நோய் தீவிரமானதும் கண் மருத்துவர்களை நாடி வருகின்றனர்.

இந்த மெட்ராஸ்-ஐ நோய், ஒரு கண்ணில் தொற்று ஏற்பட்டால் அடுத்த கண்ணுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள். இது எளிதில் குணப்படுத்தக்கூடிய நோய் தொற்று தான். ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் நோய் முற்றிலும் குணமாகிவிடும்.

'மெட்ராஸ்-ஐ’ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்!

  • கண் மற்றும் கைகளை சுத்தமாக கழுவி வைத்திருக்க வேண்டும்
  • கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய பொருட்களை, மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • 'மெட்ராஸ் ஐ’ நோய் பாதிப்பு உள்ளவர்கள் அடுத்தவர் கண்களைப் பார்ப்பதால் நோய் பரவும் என்பது முற்றிலும் தவறான கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.
click me!