இனி ஐஸ்க்ரீமை ஈஸியா வீட்டிலிலேயே செய்யலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Nov 16, 2022, 9:24 PM IST

இன்று நாம் எவெர்க்ரீன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை இனி வீட்டிலிலேயே மிக சுலபமாக சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் கொள்ளலாம். 


சிறு குழ்நதைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் அதில் நிச்சயமாக ஐஸ்க்ரீம் முதல் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

வெண்ணிலா,பிஸ்தா,ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட் , டூட்டி ப்ரூட்டி,பட்டர் ஸ்காட்ச் என்று ஐஸ்க்ரீம்களில் இன்னும் பல விதங்கள் இருக்கின்றன.அனைத்து ஐஸ்கிரீம்களும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். எந்த வகை ஐஸ் கிரீம் என்றாலும் நாம் அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைத்து சாப்பிடுவோம். 

Tap to resize

Latest Videos

அதிலும் குறிப்பாக குழந்தைகள் அடம் பிடித்து இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது நிச்சயம் ஐஸ்க்ரீம் தான். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்த ஐஸ்க்ரீமை இன்றைய பதிவில் காணலாம். 

இன்று நாம் எவெர்க்ரீன் வெண்ணிலா ஐஸ்க்ரீமை இனி வீட்டிலிலேயே மிக சுலபமாக சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பால் - 1 கப் 
விப்பிங் கிரீம்- 1 கப் 
சர்க்கரை- 5 ஸ்பூன் 
வெண்ணிலா எசன்ஸ்- 1 /2 ஸ்பூன்

Sukku Malli Coffee : நறுமணம் கமழும் "சுக்கு மல்லி காபி" குடித்து ஜலதோஷத்தில் இருந்து விடுபடுங்கள் !!! 

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு அகலமான கடாய் வைத்து,1 லிட்டர் பால் ஊற்றி,பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.  அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து, பாலின் அளவு பாதியாக வரும் வரை பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அடிபிடிக்காமல் இருக்க அவ்வப் போது கிளறி விட வேண்டும். 

பால் கொதித்து பாதி அளவாக வந்த பிறகு, அடுப்பினை ஆஃப் செய்து விட்டு, கடாயினை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். பாலை ஆற வைத்துக் கொண்டு,பின் பிரிட்ஜில் சுமார் 1 மணிநேரம் வைக்க வேண்டும். 1 பௌலில் விப்பிங் கிரீம் போட்டு அதனை பீட்டர் வைத்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.பின் அதில் சர்க்கரையை சேர்த்து மீண்டும் பீட் செய்து கொள்ள வேண்டும். இப்போது பௌலில் வெண்ணிலா எசன்ஸ் ஊற்றி , பின் கொதித்து ஆற வைத்த பாலையும் சேர்த்து நன்றாக பீட் செய்து விட்டு, மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பெரிய டின் அல்லது பௌலில் இதனை மாற்றி, பிரிட்ஜில் (ஃபிரீசரில்) கிட்டத்தட்ட 8 மணி நேரங்கள் வரை வைக்க வேண்டும். 8 மணி நேரங்கள் பிறகு, அதனை வெளியே எடுத்து, சின்ன கோன்களில் ஸ்கூப்பிங் செய்து விருப்பப்பட்டால் அதன் மேல் வெட்டிய நட்ஸ் தூவி அலங்கரித்தால் சுவையான வெண்ணிலா ஐஸ்க்ரீம் ரெடி!!! இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், அடுத்த நிமிடமே காலி ஆகி விடும். 

click me!