எப்போதும் பழங்குகளும் காய்கறிகளும் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நலன்களை வழங்கக்கூடிய உணவுகள் தான். ஆனால் பழங்களுடன் ஒப்பிடும் போது காய்கறிகளில் தான், அதிகளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதுபோன்று ஊட்டச்சத்து நிறைந்த காய் குறித்து தெரிந்துகொள்வோம்
முட்டைக்கோஸ் பல வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சமகாலத்தில் பெரும்பாலும் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியனில் பயன்படுத்தப்படுகிறது. சில உணவுகளில் இது பச்சையாக சேர்க்கப்படும் போது, அதனுடைய சுவை பன்மடங்கு அதிகரிக்கும். நூடூல்ஸ், ஷவர்மா, ஃபிரைடு ரைஸ் போன்ற உணவுகளை உதாரனமாக கூறலாம். ஆனால் முட்டைக்கோஸை தனியாக சாப்பிட்டால் சுவையே இருக்காது. ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து, ரைபோஃப்ளேவின், ஃபோலேட், வைட்டமின் சி, தியாமின், வைட்டமின் பி6, மெக்னீசியம், நியாசின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் முக்கியமானவை. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் அதிகரிக்கிறது. இந்த முட்டைக்கோஸ் பச்சை, சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் இருக்கும். முட்டைக்கோசின் ஒவ்வொரு நிறமும் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இவற்றை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
நீரிழிவு கட்டுக்குள் வரும்
நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டைக்கோஸ் மிகவும் நன்மையை தருகிறது. இதை அவ்வப்போது உணவாக சாப்பிடுவதன் மூலம், உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. அதன்மூலம் ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வரும் நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்தச் சக்கரை அளவு அதிகரிக்கவே அதிகரிக்காது.
செரிமானம் நடக்கும்
இந்த காய்கறியில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமான செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மேலும் முட்டைக்கோஸில் பாலிபினால்கள் மற்றும் அந்தோசயினாசிஸ் போன்ற பொருட்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் உடலுக்கு பாதுகாப்பு வழங்கும்.
இருதயத்துக்கு மிகவும் நல்லது
தைராய்டு பிரச்னை இல்லாதவர்கள், முட்டைக்கோஸை அடிக்கடி எடுத்து வருவது இருதயத்துக்கு பல நன்மைகளை வழங்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை பாதுகாக்க உதவுகிறது. முட்டைக்கோஸை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் வருவதைக் குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருதயத்தை எளிமையான முறையில் ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
மகளிர் நலன்: சிறுநீர் பாதை தொற்று பரவ காரணமாகும் டாய்லெட் சீட்..!!
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
முட்டைகோஸில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.இது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும் நமக்கு தருகிறது. குளிர்காலத்தில் முட்டைக்கோஸை அடிக்கடி சமைத்து சாப்பிடுவதன் மூலம், பருவக்கால நோய் பாதிப்பு ஏற்படாமல் நம்மை தற்காத்துக்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
முட்டைக்கோசின் பண்புகள் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த காய்கறியில் உள்ள நார்ச்சத்து எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இதை சாப்பிடுவதால் பசி கட்டுக்குள் இருக்கும். மேலும் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். எடையைக் குறைக்க முட்டைக்கோஸை சாலட்டில் சேர்த்து வருவது நல்ல முறையில் பயனளிக்கும்.