இரத்த அழுத்தமா? உருளைக்கிழங்கு தீர்வாக இருக்கும்…

 
Published : Jan 20, 2017, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
இரத்த அழுத்தமா? உருளைக்கிழங்கு தீர்வாக இருக்கும்…

சுருக்கம்

உருளைக் கிழங்கு என்று சொன்னாலே நம்பில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ், நொறுக்குத்தீனிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உருளைக் கிழங்கு என்றாலே 'ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சினைகளை நினைத்து உருளைக் கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக் கிழங்குக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறன் உண்டு என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக் கிழங்குகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக் கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இரத்தக் கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக் கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல் என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில இரசாயனப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் உருளைக் கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக் கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால் இரத்த கொதிப்பை குறைக்கவல்ல இரசாயனப் பொருட்களும், பைடோ இரசாயன பதார்த்தம் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக் கிழங்கின் மாவுச்சத்து கொழுப்புச் சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது, கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கு என்பதால் நீங்கள் புலம்ப வேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ் சிவப்பு நிற உருளைக் கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன் தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமேல் இரத்த அழுத்தம் குறைய தைரியமா உருளைக் கிழங்கு சாப்பிடலாம்!

 

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு