ஒவ்வாமையா! கவலை வேண்டாம். இதோ இருக்கிறது தீர்வு…

 
Published : Jan 20, 2017, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஒவ்வாமையா! கவலை வேண்டாம். இதோ இருக்கிறது தீர்வு…

சுருக்கம்

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக் கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் ஒவ்வாமை ஏற்படும்.

இதைக் காணாக்கடி என்பர். இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.

இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்பட்ழருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி. மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்.

ஒவ்வாமை என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, அலர்ச்சியும் வராது, நமைச்சலும் இருக்காது.

தூசி ஒவ்வாமை:

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை - மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி ஒவ்வாமை குணமாகும்.

 

PREV
click me!

Recommended Stories

Mookirattai Keerai : பவர்புல் கீரை 'அனைத்து' பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தரும் 'மூக்கிரட்டை கீரை' பத்தி தெரியுமா?
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு