
உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள்ளன. இந்த உலர் திராட்சையில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன.
விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. மேலும் பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.
அனைவருக்கும் தேவையான உடல் வலிமையை உலர் திராட்சை தருகிறது. அனைவரும் சாப்பிடக்கூடிய ஊக்கமளிக்க கூடிய உணவாக இருக்கிறது. நீண்டநேரம் தாக்குப்பிடிக்கத்தக்க உடல்வலிமை மிக மிக அவசியம். இது உலர் திராட்சையை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கிறது.
கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் செயற்கையான இனிப்பு மிட்டாய்களை மெல்வதை விட இயற்கையான முறையிலேயே வலிமை தரும் உலர் திராட்சையை சாப்பிடுவது நல்லது.
உலர் திராட்சையை சாப்பிட்டவர்கள் ஒரு புறமும், தண்ணீர் மட்டும் குடித்து விட்டு செல்பவர்கள் ஒரு புறமும், வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை சாப்பிட்டவர்கள் ஒரு புறமுமாக ஒடினால், வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்தை ஒரு நிமிட நேரம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும் இனிப்புக்களுக்கு சமமாக உலர் திராட்சைகளும் நீடிக்கத்தக்க உடல் வலிமையை தரும்.