பெங்களூரு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும் காய்கறிகள், குறிப்பாக பீன்ஸ், கொத்தமல்லி, கீரை போன்றவற்றில் இரும்பு மற்றும் காட்மியம் உள்ளிட்ட தாதுக்கள் அதிக அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெங்களூரில், காய்கறிகளை பயிரிடுவதற்கு கழிவுநீரைப் பயன்படுத்துவதால், இந்தப் பயிர்களுக்குள் கனரக உலோகச் செறிவுகள் அதிகரித்துள்ளன என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் (EMPRI), 10 வெவ்வேறு காய்கறிகளின் 400 மாதிரிகளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) நிர்ணயித்த அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறிய மாசுபாட்டின் அளவைக் கண்டறிந்தனர்.
மாநில மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்ட பெங்களூருவுக்கு, பெங்களூரு நகர்ப்புறம், கோலார், சிக்கபல்லாபூர், ராமநகரா மற்றும் பெங்களூரு கிராமப்புறப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கிடைக்கின்றன. பெங்களூரு மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் தள்ளுவண்டி விற்பனையாளர்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை தனியார் சில்லறை விற்பனையாளர்களை நம்பியுள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தங்கள் ஆராய்ச்சிக்காக, EMPRI விஞ்ஞானிகள் பெங்களூரு முழுவதும் 20 இடங்களில் இருந்து 400 காய்கறி மாதிரிகளை சேகரித்தனர், அதில் ஐந்து மேல்தட்டு பல்பொருள் அங்காடிகள், ஐந்து உள்ளூர் சந்தைகள், "ஆர்கானிக் கடைகள்" மற்றும் ஆகியவை அடங்கும். கத்தரி, தக்காளி, குடைமிளகாய், பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, கீரை, கொத்தமல்லி உள்ளிட்ட 10 வகையான காய்கறிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.
குறிப்பிடத்தக்க வகையில், இரும்புக்கான அனுமதிக்கப்பட்ட வரம்பு 425.5 மி.கி/கி.கி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இருப்பினும் புகழ்பெற்ற ஆர்கானிக் கடைகளில் இருந்து வாங்கப்படும் பீன்ஸ் இரும்புச் செறிவு 810.20 மி.கி உள்ளது.. இதேபோல், கொத்தமல்லி 945.70 மி.கி/கிகி, மற்றும் கீரை 554.58 மி.கி/கி.கி. ஹாப்காம்ஸ் நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட காய்கறிகளில் வெங்காயத்தில் 592.18 மி.கி/கிலோ இரும்புச்சத்து உள்ளது. பெரும்பாலான மாதிரி காய்கறிகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறும் கனரக உலோகங்களின் இருப்பு காணப்பட்டது,
அதே போல் உணவு, வேளாண்மை அமைப்பு 0.2 mg/kg காட்மியத்திற்கான அதிகபட்ச வரம்பாக அனுமதி வழங்கி உள்ளது. இருப்பினும், பெங்களூருவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து வாங்கப்பட்ட கத்தரிக்காயில் 52.30 mg/kg காட்மியம் இருந்தது. கொத்தமல்லி, கீரை மற்றும் கேரட் ஆகியவை முறையே 53.30/kg, 53.50 mg/kg, மற்றும் 54.60 mg/kg என்ற அளவோடு அனுமதிக்கப்பட்ட வரம்புகளை மீறியது.
காட்மியம் ஒரு அபாயகரமான காரணியாகும், இது கல்லீரல் மற்றும் நுரையீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும், மேலும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. ஈயம், "முற்றிலும் நச்சுத்தன்மை கொண்டது", 0.3 mg/kg ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. ஆனால் இது பல காய்கறிகளில் இது அதிகமாகவே உள்ளது.
இந்த காய்கறியை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பச்சை மிளகாய், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் நிக்கலின் செறிவு பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 67.9 மி.கி-க்கு அதிகமாக உள்ளது.
இந்த ஒரு வருட ஆய்வுக்கு தலைமை தாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானி என் ஹேமா, மூன்று முக்கிய அம்சங்களில் விரிவான விசாரணைக்கு அவசர தேவை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் “ முதலாவதாக, இந்த காய்கறிகளின் ஆதாரங்களைக் கண்டறிவது, ஆதார அடிப்படையிலான அணுகுமுறையை உறுதிப்படுத்துவதற்கு முக்கியமானது. இரண்டாவதாக, ஒவ்வொரு காய்கறிக்கும் குறிப்பிட்ட அதிகபட்ச வரம்புகள் மற்றும் வெளிப்பாடு காலம் நிறுவப்பட வேண்டும். மூன்றாவதாக, குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் மீது காய்கறி நுகர்வு ஏற்படுத்தும் தாக்கம் முழுமையாக ஆராயப்பட வேண்டும். இறுதியாக, அத்தகைய காய்கறிகளை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தனிமைப்படுத்த ஒரு விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்தார்.
நீர்ப்பாசனத்திற்காக கழிவுநீரைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை இந்த கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, மேலும் விவசாயிகள் பாதுகாப்பான நெறிமுறையை பின்பற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளது.