நுங்கு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு பிரச்சனைகளை சரி செய்துவிடும் தெரியுமா?

By Ma RiyaFirst Published Mar 17, 2023, 8:00 AM IST
Highlights

Benefits of Nungu: வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய பல சத்துக்களை கொண்ட நுங்கு கோடைக்காலத்தின் வரப்பிரசாதம். 

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவது ரொம்ப நல்லது. வரும் நாள்களில் நுங்கு வியாபாரம் ஜோராக நடக்கும். வெப்பத்தை தணித்து உடலை குளிர்ச்சியாக வைப்பதில் நுங்குக்கு ஈடான வேறொரு உணவு பொருள் கிடையாது. அவ்வளவு நன்மைகள் நிறைந்தது. வெறும் உடல் சூட்டை மட்டுமா நீக்குகிறது? நிச்சயமாக இல்லை, அதில் உள்ள மற்ற பல நன்மைகளை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

நுங்கு உண்ணும் போது அதனுடைய சுளைகளை இளநீரில் ஊற வைத்து சாப்பிட்டால் ருசியும், சத்துக்களும் முழுமையாக கிடைக்கும். பனையில் கிடைக்கும் பதநீரிலும் நுங்கு போட்டு சாப்பிடலாம். வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் ஆகிய பல சத்துக்களை கொண்ட நுங்கு கோடைக்காலத்தின் வரப்பிரசாதம். 

இதையும் படிங்க: சனி பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் வந்தாச்சு.. இனி வர்ற அதிர்ஷ்டத்தால் வாழ்க்கையே மாறப் போகுது..!

நுங்கு நன்மைகள்..! 

  1. கோடை காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுப்பதில் நுங்கு நன்கு செயலாற்றும். அம்மை நோய் பாதித்தவர்களும் நுங்கு சாப்பிடலாம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும். 
  2. உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துவதில் நுங்கு வல்லமை கொண்டது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. 
  3. வயிற்று கோளாறுகளை சரி செய்வதில் நுங்கு நல்ல பலனை தரும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய இரண்டு பிரச்சனைகளுக்கும் நுங்கு சாப்பிடலாம். குடல் புண்ணை குணமாக்கிவிடும். 
  4. உடல் சூட்டினால் கடுமையாக அவதிப்பட்டு நீர்ச்சத்தை இழந்து வேதனைப்படுபவர்களுக்கு, நுங்கு அருமருந்து. இதை சாப்பிடும் போது தாகம் தணியும்.
  5. ரத்த சோகை இருப்பவர்கள் நுங்கு சாப்பிட்டால் நல்ல பலனை காண்பார்கள். 
  6. வயிற்றில் குழந்தைகளை சுமக்கும் கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால் அவர்களுடைய செரிமானம் துரிதமாகும். மலச்சிக்கல், அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருந்தால் கூட அதிலிருந்து விடுபடுவார்கள். 
  7. கோடைகால வேர்க்குருவை நீங்க செய்யும். நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீர்ச்சத்து அதிகமாகும். வெயிலினால் உண்டாகும் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். வெயில் காலங்களில் ஏற்படும் கொப்புளங்களையும், தோல் நோய்களயும் நுங்கு தடுக்கும்.
  8. கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு ஆகிய பிரச்னைகளுக்கு  நுங்கு நல்லது. 

இதையும் படிங்க: கருப்பட்டி வச்சு காபி போடாம அதை வைத்து வெயிலை சமாளிக்கும் 4 பானங்கள்..மலையை புரட்டும் அபார சக்தி கிடைக்கும்..!

click me!