
"மீன்" அசைவ பிரியர்கள் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்றாகும். மீன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளையும் வழங்கும். மீன் ஆரோக்கியத்திற்கு எப்படி நல்லதோ அதுபோல தான் மீன் முட்டையும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் தெரியுமா? அப்படி மீன் முட்டை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்? அதை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? என்று இப்போது இந்த பதிவில் காணலாம்.
மீன் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது :
மீன் முட்டையில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாகவே இருக்கிறது. இது மூளையின் செயல்பாட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது. எனவே மீன் முட்டையை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் மேம்படுவது மட்டுமல்லாமல் மூளை சுறுசுறுப்பாக செயல்படும்.
கண் பார்வைக்கு நல்லது :
உடலில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக இருந்தால் கண் பார்வை பிரச்சனை ஏற்படும். மீன் மட்டுமல்ல மீன் முட்டையும் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை மேம்படும்.
உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் :
மீன் முட்டையில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. அவை உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இரத்த உறைவதையும், உடலில் அலர்ஜி ஏற்படுவதையும் தடுக்கும். எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மீன் முட்டையை அளவோடு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது :
மீன் முட்டையில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. உடலில் கொலஸ்ட்ரால் குறைந்தால் இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எனவே இதய பிரச்சினை இருப்பவர்கள் மீன் முட்டை சாப்பிடுங்கள், இதய நோய் வரவே வராது.
நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் :
நோயெதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால் எந்தவொரு நோயும் கிட்ட கூட நெருங்காது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மீன் முட்டையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் ஏனெனில் மீன் முட்டையில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது :
பற்கள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க மக்னீசியம், வைட்டமின் டி, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் மிகவும் அவசியம். மீன் முட்டைகளில் இவை அனைத்தும் உள்ளன. எனவே உங்களது உணவில் மீன் முட்டையை சேர்த்து வந்தால் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க மாட்டீர்கள். பற்களிலும் எந்தவித பிரச்சனைகளும் வரவே வராது. பற்கள் வலிமையாக இருக்கும்.
மார்பக புற்றுநோய் :
தற்போது நிறைய பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த புற்றுநோயின் அபாயத்தை தடுக்க மீன் முட்டை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் மீன் முட்டையில் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அது மார்பக புற்றுநோயின் அபாயத்தை தடுக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
மீன் முட்டையை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
- அதிக யூரிக் அமில பிரச்சனை உள்ளவர்கள் மீன் முட்டை சாப்பிட வேண்டாம். ஏனெனில் மீன் முட்டையில் பியூரின்கள் அதிகமாக இருப்பதால் அது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.
- மீன் முட்டையில் கொழுப்புச்சத்து அதிகமாக உள்ளதால் அதிக கொழுப்பு உள்ளவர்கள் இதை மிதமாக எடுத்துக் கொள்வது நல்லது.
- மீன் அல்லது கடல் உணவுகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் மீன் முட்டையை தவிர்ப்பது நல்லது.
- கர்ப்பிணிகள் சமைக்காத அல்லது பதப்படுத்திய மீன் முட்டையை தவிர்க்கவும்.
மீன் முட்டையை எப்படி சாப்பிடலாம்?
- மீன் முட்டையை வறுவல், பொரியல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
- இது தவிர ஆவியில் வேகவைத்து உப்பு மற்றும் பிறமசல பொருட்கள் தூவியும் சாப்பிடலாம்.
- இது எல்லாத்தையும் விட மீன் குழம்பு வைக்கும் போது கொதிக்கும் குழம்பில் மீன் முட்டையை கடைசியாக போட்டும் சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.
- மீன் பொரிப்பது போல மீன் முட்டையை பொரித்து சாப்பிட்டால் அதன் கலோரிகள் ரொம்பவே அதிகமாகிவிடும். மேலும் அதில் இருக்கும் ஒமேகா- 3 கொழுப்பு அமிலங்கள் சிதைந்து விடும்.
மேலும் சொன்ன படி, மீன் முட்டையை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் பெறலாம். எனவே எப்போதெல்லாம் கிடைக்கிறதோ அப்பதெல்லாம் இதை வாங்கி சாப்பிட முயற்சி செய்யுங்கள்.