ஆன்டிபயாடிக் மருந்துகள் இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாத்திரைகள் பல வகையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு உட்கொள்ளப்படுகின்றன. எனினும் இவற்றை தொடர்ந்து சாப்பிடுவது நல்லதா? அல்லது கெட்டதா?, இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.
ஜலதோஷம் மற்றும் பிற பிரச்சனைகள் வரும்போது நம்மில் பெரும்பாலானோர் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துகிறோம். இவை சில நேரங்களில் மருத்துவர்களால் பரிந்துரைக்கபடுகின்றன. அதேசமயத்தில் சிலர் நேரடியாகவே இந்த மருந்தை உட்கொள்கின்றனர். நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பெரும்பாலும் முந்தைய மருந்துகளின் காரணமாக எடுக்கப்படுகின்றன என்கிற கருத்தை மருத்துவ ஆதாரங்கள் முன்வைக்கின்றன. அது பல சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் மாறிவிடுகின்றன. இதுகுறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
உலக சுகாதார நிறுவனம் கூறுவது என்னவென்றால்?
undefined
ஆண்டிபயாடிக் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது கிடையாது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவற்றின் அதிகப்படியான பயன்பாடு பல உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது. ஏதாவது பிரச்சனை என்றால் மெடிக்கல் ஷாப் சென்று ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக்கொண்டால் போதும் என்கிற மனநிலை நம்மில் பலரிடையே உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது ஒரு ஆபத்தான பிரச்சனையாகவும் மாறுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
அனைத்து ஆண்டிபயாடிக் மருந்துகளும் எல்லாவிதமான நுண்ணுயிர்களுக்கும் எதிர்வினையாக செயல்படும் மருந்துகளாகும். இவற்றை தொடர்ந்து சாப்பிடும் போது, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது. ஆனால் ஆண்டிபயாடிக் மருந்துகளை எப்போது சாப்பிட வேண்டும்? எதற்காக சாப்பிட வேண்டும்? என்பதை மருத்துவர்கள் தான் கூற வேண்டும். இதுபோன்ற நோய் தடுப்பு மருந்துகளுக்கு மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள் அவசியமாகிறது.
காரணம் இதுதான்
உடல்நலம் கெடுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அவை வைரஸ் பாதிப்புகள் மற்றும் பாக்ட்ரீயா பாதிப்புகள். இவை இரண்டுக்குமான தொறுக்கள் வேறுபட்டவை. பொதுவாக ஆண்டிபயாடிக் மருந்துகள் அனைத்து, பாக்ட்ரீயா எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. இதை வைரஸ் பாதிப்புக்கு வேண்டி சாப்பிட முடியாது. சில சமயங்களில் அதன்மூலம் வேறுசில பிரச்னைகள் கூட ஏற்படக்கூடும். பிரச்சனையை கண்டறிந்த பிறகு மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிடுங்கள்.
தம்பதிகளுக்குள் விவகாரத்து ஏற்படுவதற்கு தூக்கமும் ஒரு காரணம் தான்..!!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆண்டிபயாடிக் மருந்துகள் விஷயத்தில் சில முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது கட்டாயம்.