உள்ளாடைகள் மட்டும் அணிந்தபடி மனைவி வீடு முழுவதும் சுற்றித் திரிவதால் கணவன் மனதளவில் அவதி... நிபுணர் அளிக்கும் விளக்கம்..
காலம் நவீனமாகிறது. சிந்தனைகள் முன்னேறி வருகிறது. இப்போதும் உடைகளில் சில கலாச்சார புனிதங்கள் உள்ளன. வாசகர் ஒருவர் அப்படியான குழப்பத்தில் எழுப்பிய கேள்விக்கு விடை காணலாம். "என்னுடைய மனைவி உள்ளாடையுடன் வீடு முழுவதும் அலைகிறாள். அது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் அவளிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனாலும் என்னுடைய எதிர்ப்பை அவள் வேடிக்கையாக நினைக்கிறாள். நாங்கள் தனிக்குடித்தனம், ஆனாலும் அவள் உள்ளாடைகளுடன் உலாவுவது எனக்கு மிகவும் அழகற்றதாக தோன்றுகிறது" என்ற குழப்பத்தின் வெளிபாடன கேள்விக்கு இங்கு விடை காணலாம்.
நிபுணரின் பதில்: உறவுகள் இரண்டு இடங்களில் பாதிக்கப்படுகிறது. அது நாம் இதுவரை அனுபவித்திராத ஒரு சிறப்பு வகையான சுதந்திரத்தை அனுமதிக்க எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்னொன்று விரும்பியவரின் ஏற்றுகொள்ளுதலுக்காக ஏங்கி நிற்கிறது. உங்களுடைய மனைவி குழந்தையின் நம்பிக்கை, உற்சாகம் ஆகியவற்றுடன் இருக்கும் நபராக இருக்கலாம். நமது நேர்மையான கோரிக்கைகள் தீவிரமாகக் கருதப்படாதபோது காயமும் விரக்தியும் அடைவது புரிந்துகொள்ளத்தக்கது. அப்படியான சமயங்களில் நேர்மையுடனும், மரியாதையுடனும் நம்மை மீண்டும் வெளிப்படுத்துவது முக்கியம். நாம் கோவம் கொண்டாலோ அல்லது அவமதித்தாலோ, நமது துணை நாம் சொல்வதை கொஞ்சம் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அது தற்காலிகமானது.
உங்கள் மனைவியுடன் இது குறித்த உரையாடலை நடத்துவதற்கு முன், நிர்வாணம் பற்றிய உங்கள் சொந்த எண்ணங்களை ஆராய வேண்டும். ஏன் நிர்வாண உடல் உங்களுக்கு அழகற்றதாக தோன்றுகிறது? அதை என்னவாக நினைக்கிறீர்கள்? நீங்கள் விரும்பும் ஒருவரின் உடலே ஏன் கவர்ச்சியற்றதாக தோன்றுகிறது? என்பதை பற்றி யோசியுங்கள். உங்கள் மனைவியின் கவர்ச்சியான உடல் உங்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது? கவர்ச்சி குறித்த உங்கள் வரையறை என்ன? நிர்வாணத்தைப் பற்றிய உங்கள் சிந்தனைகள் பற்றி மீண்டும் சிந்தியுங்கள்.
நாம் குழந்தைகளாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பது இயல்பாக இருக்கிறது. ஆனால் நாம் பதின்பருவம், முதிர்வயதை அடையும்போது நமது நிர்வாணத்தைச் சுற்றி பல கட்டுப்பாடுகளை சமூகம் கட்டியமைத்துள்ளது. நிர்வாணத்தைப் பாலுணர்வோடு தொடர்புபடுத்துவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: கள்ள உறவு கூட ஒருவிதத்துல நல்லதுனு சொல்றாங்க... ஏன் தெரியுமா?
நமது நிர்வாண உடல்கள் எப்போதும் நுகர்வுக்கானவை அல்ல. அவை வெறும் உடல்கள். நிர்வாணம் பற்றிய நமது அடிப்படை நம்பிக்கைகளில் கலாச்சாரம் தான் பெரும் பங்கு வகிக்கிறது. பழமைவாத குடும்பங்களில் வளர்ந்து வரும் பெண்கள், உடலை முழுமையாக மறைக்கும் வகையில் ஆடைகளை உடுத்துகின்றனர். இதனால் நைட்டி, சுரிதார் ஆகிய ஆடை அணிவது குறித்த நமது இயல்புநிலை பல விஷயங்களை ஆழ்மனதில் உருவாக்கியது. அதை எல்லோரிடம் பொருத்தி பார்த்தால் ஏற்று கொள்ள முடியாத விஷயங்கள் மனதில் தோன்றலாம். உடைகள் வசதிக்காக உடுத்துபவை. உங்களது துணை உங்களிடம் சுதந்திரத்தை உணர்ந்திருக்கலாம். ஆடைகள் குறித்த அவரது பார்வையை தெரிந்து கொள்ளுங்கள்.
மேலே சொல்லப்பட்ட கேள்விகளை யோசித்து, அதற்கு நீங்களே பதிலளித்துவிட்டால், உங்கள் துணையின் உடலை குறித்த புரிதல் வரும்.உங்கள் துணையின் உடலை தணிக்கை செய்ய வேண்டிய அவசியம் எங்கிருந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். சில சமயங்களில் நமது எதிர்வினைகள் மற்றவர்களின் நடத்தைகளிலிருந்து உருவாகவில்லை, மாறாக நமது சொந்த கருத்துக்களில் இருந்து உருவாகின்றன.
நிர்வாணமாக இருப்பதும், உள்ளாடைகளுடன் உலாவுவதும் உங்கள் மனைவிக்கு சுதந்திரம் மற்றும் ஆறுதலின் அடையாளமாக இருக்கலாம். அது உங்களை பொறுத்தவரை பொருத்தமற்றது, நாகரீகமற்றது. உங்கள் துணையுடன் இந்தக் கேள்விகளை குறித்து உரையாடுவதன் மூலம் தீர்வு கிடைக்கும். அவரது வெளித்தோற்றத்தை நீங்கள் புறக்கணிக்கும் நடத்தையை குறித்தும் பேசி புரியவைக்கலாம். நலம் வாழுங்கள்.
இதையும் படிங்க: உடலுறவு கொள்ளாமல் இருந்தாலும் ரொம்ப நல்லது.. ஏன் தெரியுமா?