உடலுறவு கொள்ளாமல் இருந்தாலும் ரொம்ப நல்லது.. ஏன் தெரியுமா?
உடலுறவு கொள்ளாமல் இருப்பதும் நல்லதுதான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வெவ்வேறு காரணங்களுக்காக உடலுறவு கொள்ள வேண்டாம் என மக்கள் முடிவு செய்கிறார்கள். சிலருக்கு சலிப்பு வருவதும், ஆர்வமில்லாமல் இருப்பதும் காரணம். சிலருக்கு நேரமின்மையும், உடல் சோர்வும் காரணம். உடலுறவு கொள்வது எப்படி உடலுக்கு சில நன்மைகளை தருகிறதோ, அதைப் போலவே உடலுறவு கொள்ளாமல் இருப்பதும் நல்லது தான். உடலுறவு வைத்து கொள்ளாமல் இருப்பதன் நன்மைகளை நிபுணர்கள் கூறுவது பின்வருமாறு:
ஒருவர் உடலுறவைத் தவிர்ப்பது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றின் அபாயத்தை முற்றிலும் குறைக்கும். சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அபாயத்தையும் முற்றிலும் குறைக்கிறது.
தம்பதிகள் உடலுறவைத் தவிர்ப்பது, மற்ற உணர்ச்சிரீதியான விஷயங்களில் கவனம் செலுத்த நேரத்தை அளிக்கலாம். நோய் அல்லது மருத்துவ பிரச்சனைகளுக்கு பிறகு, உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது அவசியம். இதனால் நோய் குணமாகும் செயல்முறையை விரைவுபடுத்தலாம்.
பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க விரும்புபவர்கள், நீண்ட நேரம் உடலுறவு கொள்ளாமல் இருப்பது சலிப்பை உண்டாக்கும். ஒரு உறவில் நீங்கள் இருந்தால், உடலுறவு திருப்தியில்லை என்பதை நீங்கள் உணர்ந்தால், உங்கள் துணையுடன் நேர்மையாக உரையாடுவது நல்லது. இதனால் தாம்பத்தியம் சிறக்கும்.
கருத்தடை செய்து கொள்ளாமல் இருக்கும் பலர் உறவு கொள்ளும்போது கருத்தரிக்கும் பயத்தில் மூழ்கிவிடுவர். கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு உடலுறவு கொள்வதைத் தவிர்ப்பதுதான் முழுக்க சரியான வழியாக இருக்கும்.
ஒருவருடன் உடலுறவு கொள்ளும்போது, உங்களுடைய இன்பத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். சுயஇன்பத்தில் எந்த அம்சங்களை விரும்புகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள உடலுறவு கொள்ளாத காலம் சிறந்த வாய்ப்பாகும். அதன் பிறகு பாலுறவு செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடிவு செய்தால், உடலுறவை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற உங்கள் துணையிடம் இது குறித்து பேசுங்கள். தாம்பத்தியம் சிறக்கும்.
இதையும் படிங்க: கள்ள உறவு கூட ஒருவிதத்துல நல்லதுனு சொல்றாங்க... ஏன் தெரியுமா?
இதையும் படிங்க: ஆணுறுப்பு அளவை நினைச்சு வருத்தப்படாதீங்க.. இந்த ஒரு பொருள் போதும்.. ஒரே மாதத்தில் மாற்றத்தை கண்ணால பார்ப்பீங்க