Late Dinner: இரவில் உணவை தாமதாமாக சாப்பிடுபவரா நீங்கள்? அப்போ இது உங்களுக்கு தான்!

By Dinesh TGFirst Published Nov 13, 2022, 10:48 PM IST
Highlights

தினசரி தாமதமாக உணவு உண்ணுவதும் தவறான பழக்கம். இது, பின்னாளில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம்.

உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பெரும்பங்கு வகிப்பது உணவுகள் தான். என்ன தான் உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும், ஆரோக்கியத்திற்கு அடிப்படையே உணவு தான். அதிலும் குறிப்பாக, உணவை நாம் சரியான நேரத்திற்கு உண்ணுவது தான் மிகவும் சிறந்தது. தினசரி தாமதமாக உணவு உண்ணுவதும் தவறான பழக்கம். இது, பின்னாளில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடுவது தான் மிகவும் முக்கியம்.

தாமதமான இரவு உணவு 

அதிகம் பேர் 9 மணிக்குள்ளோ அல்லது அதற்கும் பிறகோ தான் இரவு சாப்பாட்டை உண்கிறார்கள். இதுதவிர இரவு 10 மணி மற்றும் 11 மணியைக் கடந்த பிறகும் உண்பவர்கள் இருக்கின்றனர். இப்படி இரவு உணவை தாமதமாக சாப்பிடுவதால், செரிமான மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலை தொடர்ந்தால், உடல் ஆரோக்கியம் முழுவதும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், பின்னாளில் பெரிய உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தி நம்மைப் பாடாய்ப்படுத்தும். ஆகவே, இரவு உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவதே மிகவும் நல்லது. அவ்வகையில் எந்த நேரத்தில் இரவு உணவை சாப்பிட வேண்டும் என்பதையும், தாமதமாக இரவு உணவை சாப்பிட்டால் உண்டாகும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது குறித்தும் இப்போது தெரிந்து கொள்வோம்.

Ladyfinger: இளவயதில் வயதான தோற்றமா? வெண்டைக்காயை இப்படி யூஸ் பன்னுங்க!

இரவு உணவை எப்போது சாப்பிட வேண்டும்

  • இரவு உணவை, இரவு 7 மணிக்குள்ளாக சாப்பிடுவது தான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இரவு 7 மணிக்குள் சாப்பிட்ட பிறகு, இரவு 9 மணிக்கு மேல் தூங்கச் செல்வது தான் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்தது. இதுவே, நாம் நிம்மதியாக தூங்க வழிவகை செய்யும். 
  • காலை உணவு மற்றும் இரவு உணவு ஆகிய இரண்டிற்கும் இடையே போதுமான இடைவெளி இருந்தால், உடல் எடை கணிசமாக குறையும்.  
  • இரவு 7 மணிக்குள்ளாக சாப்பிட்டால், உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்பட்டு விடும்.
  • இரவு உணவு மற்றும் மறுநாள் காலை உணவு ஆகிய இரண்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 10 மணி நேர இடைவெளி இருப்பது தான் நல்லதாக அமையும்.
  • இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள்
  • இரவு உணவை தாமதமாக சாப்பிட்டால், உணவு நன்றாக செரிமானம் ஆகாது.
  • இரவில் தாமதமாக சாப்பிடுவதால் அஜீரணம் மாறும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
  • இரவில் தாமதமாக சாப்பிட்ட பிறகு, உடனே தூங்கச் செல்வதால், அது தூக்க சுழற்சிக்கும் இடையூறை விளைவிக்கிறது.
  • தாமதமாக இரவு உணவை எடுத்துக் கொள்ளும் போது, கூடுதல் கலோரிகளை எடுத்து கொள்ளும். இதன் காரணமாக, இது செரிமானம் ஆவதற்கு நேரமில்லாமல் போகிறது. 
  • இரவு சாப்பாட்டின் அளவு அதிகரித்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
  • நீரிழிவு, தைராய்டு மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இரவு உணவை குறைவாக சாப்பிடுவது நல்லது.
click me!