கல்லீரல் நம்முடைய உடலை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நாம் உண்ணும் உணவில் இருக்கும் நல்லவைகள் மற்றும் கெட்டவைகள் எதுவென தரம் பிரித்து, வெளியேற்றும் வேலையை சிறப்பாக செய்கிறது.
நமது உடல் உறுப்புகள் சீரான இயக்கத்தில் இயங்கினால் மட்டுமே நம்மால், ஆரோக்கியமாக இருக்க முடியும். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான வேலைகளைச் செய்கிறது. இதில் கல்லீரலின் சீரான இயக்கம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இயல்பாகவே, கல்லீரல் நம்முடைய உடலை சுத்திகரிப்பதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. நாம் உண்ணும் உணவில் இருக்கும் நல்லவைகள் மற்றும் கெட்டவைகள் எதுவென தரம் பிரித்து, வெளியேற்றும் வேலையை சிறப்பாக செய்கிறது.
கல்லீரல் அதிகப்படியான கொழுப்பு
undefined
நமது உடலில் கல்லீரல் பல இயக்கங்களை கவனித்துக் கொள்கிறது. ஒருவேளை கல்லீரல் சரியாக செயல்படாத சமயத்தில், நம் உடலில் பல இயக்கங்கள் பாதிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக கல்லீரலில் அதிகளவில் கொழுப்பு படிந்தால், அது மிகப்பெரிய உடல்நலப் பிரச்சனையாக மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளது.
அதிகப்படியான கொழுப்பு கல்லீரலில் தேக்கமடைந்தால் கல்லீரல் அழற்சி, கல்லீரல் சேதம் மற்றும் கல்லீரலில் காயங்களை உண்டாக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதுவே பின்னாளில், கல்லீரல் செயலிழப்புக்கும் வழி வகுத்து விடுகிறது. ஆகவே இதனை தொடக்த்திலேயே நீக்குவது தான் மிகவும் நல்லது. இதற்கு ஒருசில இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு நாம் அறிந்து கொள்வோம்.
Toenail: கால் ஆணியால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
கல்லீரல் கொழுப்பை நீக்கும் வழிகள்
கோதுமைப் புல்லில் அதிகளவில் குளோரோபில் நிறைந்துள்ளது. இது, நம் உடலில் இருக்கும் நச்சுத் தன்மையை நீக்க உதவுகிறது. இதன் மூலமாக கல்லீரலை ஆரோக்கியமான முறையில் பாதுகாக்க, கோதுமைப் புல் உதவி புரிகிறது.
அனைவருக்கும் பிடித்த பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் மற்றும் பீட்டாலைன்கள் எனும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் அதிகளவில் நிரம்பியுள்ளது. இதன் மூலமாக ஆக்ஸிடேட்டிவ் டேமேஜ் மற்றும் கல்லீரல் வீக்கம் ஆகியவற்றை சரி செய்ய முடியும்.
சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள், நம் உடலில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவினை உயர்த்துவது மட்டுமல்லாமல், கல்லீரலில் உண்டாகும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது.
காளிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி கல்லீரலுக்கு மிகவும் நல்லது. இவையிரண்டும் கல்லீரலின் இயற்கையான நச்சு நீக்கும் என்சைம்களை அதிகப்படுத்துவது மட்டுமல்லாமல், கல்லீரல் சேதமடைவதை தடுத்து பாதுகாக்கிறது.
நட்ஸ் வகைகளில் கல்லீரலுக்கு அதிகளவில் நன்மை தரக் கூடியது வால்நட்ஸ் மட்டுமே. இது கல்லீரலில் நிறைந்துள்ள கொழுப்பை குறைப்பதற்கு உதவி புரிகிறது.