சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி விதைகளை, இரவில் தூங்குவதற்கு முன்பாக நீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடித்தால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
அன்றாட உணவில் மணத்தையும், சுவையையும் மேம்படுத்த சமையலில் காலங்காலமாக கொத்தமல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் எனர்ஜி போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கொத்தமல்லி விதைகளை, இரவில் தூங்குவதற்கு முன்பாக நீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அந்த நீரை வடிகட்டிக் குடித்தால், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
கொத்தமல்லியின் நன்மைகள்
சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் தூங்குவதற்கு முன்னதாக, சிறிது கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் வடிகட்டி அந்த நீரைக் குடிக்க வேண்டும்.
கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த நீரை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. இப்படி தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து முற்றிலுமா விடுபட முடியும்.
வெறும் வயிற்றில் கொத்தமல்லி விதைகள் ஊற வைத்த தண்ணீரைக் குடிக்கலாம் அல்லது 3 கிராம் கொத்தமல்லி பொடியை 150 மி.லி. கொதிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டியும் குடிக்கலாம்.
இந்த வார சண்டேக்கு கிரில்டு இறால் ரெசிபியை செய்யலாம் வாங்க!
செரிமானப் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் பெற, 1.2 கிராம் கொத்தமல்லி விதைகள் அல்லது 1/2 தேக்கரண்டி மல்லிப் பொடியை, 150 மிலி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சிறிது நேரம் கழித்து இறக்கி, 15 நிமிடங்களுக்குப் பின்னர், அதில் தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடியுங்கள். குறிப்பாக உணவு சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக குடிப்பது மிகவும் நல்லது.
மல்லி விதைகளை இரவில் ஊற வைத்து, அடுத்த காலையில் குடித்து வந்தால், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீராக்கப்பட்டு, மாதவிடாய் காலங்களில் சந்திக்க நேரிடும் வயிற்று வலி மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றைத் தவிர்த்து விடலாம்.
கொத்தமல்லி விதைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இந்த நீரைக் கொண்டு கண்களைக் கழுவினால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்க முடியும்
கொத்தமல்லி விதைகளை ஊற வைத்து குடிப்பதால், மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சி தடுக்கப்படுகிறது.
கொலஸ்ட்ராலை குறைக்க 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, தினந்தோறும் 1 அல்லது 2 முறை குடித்து வர வேண்டும். மேலும் சுவை வேண்டுமென நினைத்தால் சிறிதளவு தேன் கலந்து கொள்ளலாம்.
கொத்தமல்லி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து விரைவாக விடுபட முடியும்.